மக்கள் தாய்நாட்டுக்குத் திரும்ப வேண்டும்: சிரியாவின் இடைக்கால பிரதமர் அழைப்பு!
பர்மிங்காம் டெஸ்ட்: 200 நாள்களுக்கு முன் விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுகள்!
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் பர்மிங்காம் டெஸ்ட் போட்டிக்கான முதல் 4 நாள்களுக்கான டிக்கெட்டுகள் 200 நாள்களுக்கு முன்னதாக விற்றுத்தீர்ந்து விட்டதாக எட்ஸ்பேஸ்டன் மைதானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் - கவாஸ்கர் கோப்பைக்கான தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில் 2-வது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் இந்தத் தொடர் சமனில் இருக்கிறது.
இதையும் படியுங்கள்| தொலைக்காட்சி பார்த்து கிரிக்கெட் கற்றுக்கொண்டேன்: பும்ரா!
3-வது டெஸ்ட் போட்டி சனிக்கிழமை தொடங்கும் நிலையில், இவ்விரு அணிகளும் மோதும் பாக்ஸிங் டே டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான முதல்நாள் போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனையாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தின.
இந்தத் தொடரில் இந்தியா வெற்றிபெற்றால், உலக டெஸ்ட் சாம்பியன்ஸிப்பின் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும், அவ்வாறு தகுதிபெற்றால் ஜூன் மாதம் 11 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் விளையாடும். அதன்பின்னர், இங்கிலாந்தில் ஜூன் மாதம் 20 ஆம் தேதி லீட்ஸில் தொடங்கும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இவ்விரு அணிகள் மோதும் பர்மிங்காம் டெஸ்ட் போட்டி ஜூலை மாதம் 2 ஆம் தேதி தொடங்குகிறது.
இதையும் படியுங்கள்|ஓவியர், பாடகர், எழுத்தாளர்..! சச்சினின் தூக்கத்தை கெடுத்த பௌலரின் புதிய பரிணாமம்..!
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் இந்தத் தொடர் பட்டோடி கோப்பை என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில், பர்மிங்காமின் எட்ஜ்பேஸ்டனில் நடைபெறும் போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டிக்கெட்டுகள் 25 யூரோவில் இருந்து 299 யூரோ வரை விற்பனை செய்யப்பட்டுள்ளன. மேலும், 16 வயதுக்குள்பட்டோருக்கு 10 யூரோக்களாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதையும் படியுங்கள்|ஒருவரையொருவர் மாறிமாறி புகழ்ந்துகொண்ட ஜோ ரூட், ஹாரி புரூக்!
ஆஷஸ் தொடர் அல்லாத, ஒரு தொடருக்கு 4 நாள்களுக்கான டிக்கெட்டுகளும், அதுவும் 7 மாதங்களுக்கு முன்னதாக விற்றுத்தீர்ந்து போவது இதுவே முதல்முறையாகும்.
இதற்கு முன்னதாக, பர்மிங்காமில் நடைபெறவுள்ள மேற்கிந்திய தீவுகளுக்கான டெஸ்ட் 3 நாள்கள் டிக்கெட்டுகளும், ஆஷஸ் தொடருக்கான 4 நாள்கள் டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்துவிட்டன.
கடந்த 2022 ஆம் ஆண்டு எட்ஜ்பேஸ்டனில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ சதத்தால், இந்திய அணி நிர்ணயித்த 378 ரன்களை இங்கிலாந்து அணி விரட்டிப்பிடித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.