செய்திகள் :

பறவையாக பறந்த ஃபிலிப்ஸ்..! வைரலாகும் கேட்ச் விடியோ!

post image

நியூசிலாந்து அணி இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து 348க்கு ஆல் அவுட்டானது.

அடுத்து விளையாடிவரும் இங்கிலாந்து அணி 2ஆம் நாள் முடிவில் 74 ஓவர்களில் 319/5 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தப் போட்டியில் நியூசிலாந்து வீரர் கிளென் ஃபிலிப்ஸ் போட்டியின் 53ஆவது ஓவரில் சௌதி ஓவரில் இங்கிலாந்து வீரர் ஆலி போப் அடித்த பந்தினை அற்புதமாக தாவி பிடிப்பார்.

இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

ஃபீல்டிங்குக்கு பெயர்போன அணி என்றால் அதில் நியூசிலாந்து நிச்சயமாக இருக்கும். அதிலும் கிளென் ஃபிலிப்ஸ் நம்பமுடியாத அளவுக்கு ஃபீல்டிங் செய்வார்.

இந்தக் காட்சிகளை சோனி சோனி லைவ் “இது பறவை, விமானம்” எனக் குறிப்பிட்டு வர்ணித்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிராக தற்போது பிடித்த இந்த கேட்ச் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

இங்கிலாந்து அணி 29 ரன்கள் பின்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

முதல் டெஸ்ட்: தென்னாப்பிரிக்கா 382 ரன்கள் முன்னிலை!

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி உணவு இடைவேளையின்போது, 382 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன் த... மேலும் பார்க்க

டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை; அணியில் 11 பேரும் பந்துவீச்சு!

சையத் முஷ்டாக் அணி தொடரில் மணிப்பூர் அணிக்கு எதிரான போட்டியில் தில்லி அணி புதிய சாதனை படைத்துள்ளது.மணிப்பூர் - தில்லி அணிகள் மோதிய போட்டி மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ம... மேலும் பார்க்க

வலைப் பயிற்சியில் ஷுப்மன் கில்; 2-வது டெஸ்ட்டில் விளையாடுவாரா?

காயத்திலிருந்து குணமடைந்து வரும் ஷுப்மன் கில் வலைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ஷுப்மன் கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ... மேலும் பார்க்க

பிங்க் பந்தில் ஆடுவது எப்படி? தோல்வியே காணாத ஆஸி.யை வீழ்த்த டிப்ஸ் வழங்கிய புஜாரா!

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் பார்டர் - கவாஸ்கர் தொடரின் 2ஆவது டெஸ்ட் போட்டி இரவு பகல் ஆட்டமாக பிங்க் பந்தில் நடைபெறவிருக்கிறது. முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அடிலெய்டில் ஆஸ்தி... மேலும் பார்க்க

ஹாரி புரூக் சதத்தால் மீண்ட இங்கிலாந்து..!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து 319 ரன்கள் குவித்துள்ளது. நியூசிலாந்து அணி இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியி... மேலும் பார்க்க

முதல் டெஸ்ட்: வலுவான நிலையில் தென்னாப்பிரிக்கா!

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வலுவான நிலையில் உள்ளது.இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று (நவம்பர் 27) டர்பனில் தொடங்கியது. இந்... மேலும் பார்க்க