செய்திகள் :

பல்லை பிடுங்கிய வழக்கில் 16 முறையாக ஆஜராகாத பல்வீர்சிங்; பிசிஆர் கோர்ட்டுக்கு மாற்றக் கோரிக்கை

post image

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் துணைக் காவல் கண்காணிப்பாளராக ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர்சிங் பணியாற்றிய போது, பல்வேறு வழக்குகளில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை பிடுங்கி கொடூரமாக சித்திரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக, பல்வீர்சிங் மற்றும் அவருடன் பணியாற்றிய ஆய்வாளர் உட்பட 14 போலீஸார்மீது சிபிசிஐடி போலீஸார் நான்கு தனித்தனி வழக்குகளை பதிவு செய்தனர்.

அந்த வழக்கு நெல்லை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சத்யா முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக, அந்த வழக்கு 28-வது முறையாக விசாரணைக்கு வந்தது.

பல்லை பிடுங்கிய வழக்கில் ஆஜராகாத பல்வீர்சிங்
பல்லை பிடுங்கிய வழக்கில் ஆஜராகாத பல்வீர்சிங்

இதுவரை நடைபெற்ற 28 விசாரணைகளில், 16-வது முறையாக பல்வீர்சிங் வழக்கின் விசாரணைக்கு ஆஜராகவில்லை. பாதிக்கப்பட்ட பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் தனது தாயாருடன் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

அவர்தரப்பில் ஆஜரான மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குநரும் மதுரை கிளையின் வழக்கறிஞருமான ஹென்றி திபேன், பட்டியலின இளைஞரின் வழக்கை மட்டும் தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.

அப்போது அவர் வாதாடுகையில், “சிபிசிஐடி போலீஸார் பதிவு செய்த நான்கு வழக்குகளில், இந்த தீண்டாமை வன்கொடுமை சட்டப்பிரிவுகளை பயன்படுத்த முடியாது என்பதைக் காட்டுவதற்காகவே சிபிசிஐடி பெரும்பாலும் பட்டியலின மற்றும் பழங்குடியின போலீஸ் அதிகாரிகளையே சேர்த்துள்ளது.

ஆனாலும், அந்த வழக்கில் பட்டியலினத்தைச் சேர்ந்தவரல்லாத குற்றவாளிகளும் உள்ளனர். எனவே, தீண்டாமை வன்கொடுமை சட்டப்பிரிவுகளை பயன்படுத்த முடியும் என்பதைக் குறிப்பிடும் உயர்நிலை விசாரணை அதிகாரி அமுதாவின் இடைக்கால அறிக்கையை, சிபிசிஐடி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வரவில்லை.

பல்லை பிடுங்கிய வழக்கில் ஆஜராகாத பல்வீர்சிங்
பல்லை பிடுங்கிய வழக்கில் ஆஜராகாத பல்வீர்சிங்

அமுதா தனது விசாரணையில், பாதிக்கப்பட்டவர்களின் தாயிடம் ஜி.பே மூலம் லஞ்சம் பெற்றவர் முதல் சித்திரவதையின் போது சிசிடிவி கேமராவை அணைத்தவர் வரை பல போலீஸ் அதிகாரிகளையும், மேலும் பாதிக்கப்பட்டவர்களின் காயங்களைப் புறக்கணித்த அரசு மருத்துவரையும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், முதல் தகவல் அறிக்கையிலும் குற்றப்பத்திரிகையிலும் இந்த விவரங்கள் இடம்பெறவில்லை,” என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி சத்யா, “வழக்கை மாற்றக் கோரும் மனு ஏன் இவ்வளவு தாமதமாக தாக்கல் செய்யப்படுகிறது? இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்வது விசாரணையை மேலும் தாமதப்படுத்தும். இந்த வழக்கை மூன்று மாதங்களுக்குள் முடிக்க நான் திட்டமிட்டிருந்தேன்,” என்று கேள்வி எழுப்பினார்.

பல்லை பிடுங்கிய வழக்கில் ஆஜராகாத பல்வீர்சிங்
பல்லை பிடுங்கிய வழக்கில் ஆஜராகாத பல்வீர்சிங்

அதற்கு பதிலளித்த ஹென்றி திபேன், “நாங்கள் நான்கு வழக்குகளில் ஒன்றை மட்டுமே மாற்றக் கோருகிறோம். மற்ற மூன்று வழக்குகளில் நாங்கள் தலையிடவில்லை. தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி, வழக்கு நடவடிக்கைகளைப் பற்றிய தகவலை அறியும் உரிமை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படவில்லை,” என்றார்.

இதனையடுத்து, வழக்கு விசாரணை வரும் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பல் பிடுங்கிய வழக்கை தீண்டாமை வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் மனு அளிக்கப்பட்டிருப்பது, இவ்வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Scam: டிஜிட்டல் கைது, சைபர் அடிமை, பார்ட்-டைம் ஜாப், கடன் செயலி; எத்தனை மோசடி, எப்படி தப்பிக்கலாம்?

இணையதள சேவைகள் மற்றும் போதிய விழிப்புணர்வு இல்லாமை காரணமாக பல வழிகளில் இணைய மோசடிகள் நடைபெற்றுவருகின்றன.இதைத் தடுக்கும் வகையில் அரசு மற்றும் காவல்துறை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து ... மேலும் பார்க்க

மதுப்பழக்கம்: வேலைக்குச் செல்லாமல் மனைவியிடம் தகராறு; கண்டித்த மாமியாரை வெட்டிக் கொலை செய்த இளைஞர்

நெல்லை அருகேயுள்ள சுத்தமல்லியைச் சேர்ந்தவர் செல்லப்பா. இவரது மனைவி வள்ளியம்மாள். இவர்களுக்கு துர்காதேவி என்ற மகளும், விக்னேஷ் என்ற மகனும் உள்ளனர். இதில் துர்காதேவி கீழச்செவலைச் சேர்ந்த ஆறுமுகநயினார் எ... மேலும் பார்க்க

பீகார்: பிரசாந்த் கிஷோர் கட்சி நிர்வாகி துப்பாக்கியால் சுட்டு, கார் ஏற்றி படுகொலை - என்ன நடந்தது?

பீஹாரில் வரும் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் ஆளும் கட்சி தொடர்ந்து நிதீஷ் குமாரை முதல்வர் வேட்பாளராக நிறுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் ராஷ்... மேலும் பார்க்க

கரூர்: 3D கேமரா, சாலையை அளக்கும் பணி! - இரண்டாவது நாளாக CBI அதிகாரிகள் விசாரணை!

கரூர், வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி அந்த கட்சியின் தலைவர் விஜய் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு கூட்டத்தில் உரையாற்றும் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41... மேலும் பார்க்க

திருச்சி: இன்டர்வியூ-க்கு சென்ற இளம்பெண் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு; போலீஸ் தீவிர விசாரணை

திருச்சி மாவட்டம், சீனிவாச நகர் பகுதியைச் சேர்ந்தவர் மீரா ஜாஸ்மின் (வயது: 22). கல்லூரி படிப்பை முடித்த மீரா ஜாஸ்மின், வேலை தேடி விண்ணப்பித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று வேலை விஷயமாக நேர்முகத் தே... மேலும் பார்க்க

புனே: "ரூ.10,000-க்கு 10 ஆண்டு கொத்தடிமைகளாக இருந்தோம்" - கரும்பு வெட்டும் 27 தொழிலாளர்கள் மீட்பு

மகாராஷ்டிராவில் புனே, சோலாப்பூர் போன்ற மாவட்டங்களில் அதிக அளவு கரும்பு விளைவிக்கப்படுகிறது. கரும்பு வெட்டுவதற்காக தொழிலாளர்கள் அண்டை மாவட்டத்தில் இருந்து அழைத்து வரப்படுவது வழக்கம்.அது போன்று புனே அரு... மேலும் பார்க்க