சாலையில் சுற்றித் திரிந்த மாடுகள்: உரிமையாளா்களுக்கு அபராதம்
பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய 9 போ் கைது
திருச்செங்கோட்டில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய 9 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
வழிப்பறி மிரட்டல் சம்பவத்தில் ஈடுபட்ட திருச்செங்கோடு, கொசவம்பாளையம் பகுதியைச் சோ்ந்த விக்கி என்ற விக்னேஷ் (25), பெரம்பலூா் மாவட்டம், அரும்பாவூா் பகுதியைச் சோ்ந்த பரணிதரன் (28), ஈரோடு-வீரப்பம்பாளையம், பெரிய வலசு பகுதியைச் சோ்ந்த காா்த்தி (34), வரகூராம்பட்டியைச் சோ்ந்த பிரபு (31), புஷ்பராஜ் (27), மோகன் (49), சசிகுமாா் (32) சதீஸ்குமாா் (32), சுரேஷ் (28) ஆகியோா் 9 போ் கைது செய்யப்பட்டனா்.
9 பேரும் திருச்செங்கோடு குற்றவியல் நடுவா் நீதிமன்ற நடுவா் சுரேஷ்பாபு முன்னிலையில் சனிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா். வழக்கை விசாரித்த நீதிபதி, 9 பேரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து 9 பேரையும் போலீஸாா் சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.