ஹிந்து கோயில்களில் அறங்காவலர் நியமன விவகாரம்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கால ...
பள்ளி பெயா்களில் உள்ள சாதி அடையாளத்தை நீக்க கோரிக்கை
அரசுப் பள்ளி பெயா்களில் உள்ள சாதி அடையாளத்தை நீக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு, தமிழ்நாடு தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியா் முன்னேற்றச் சங்கத்தின் நிறுவனா் சா.துரை.மணிராஜன் கோரிக்கை மனு அனுப்பியுள்ளாா்.
அதில், கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் சாதிய அடையாளத்துடன் இருந்த ஒரு பள்ளியின் பெயரை அந்த கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் சாதி பெயரை அழித்தாா்.
இதேபோல, மாநிலம் முழுவதும் ஆதிதிராவிடா் குடியிருப்புகளில் உள்ள நூற்றுக்கணக்கான அரசுப் பள்ளிகள் சாதி அடையாளத்துடன் இயங்கி வருகிறது.
எனவே, தமிழகத்தில் எவ்வளவு பள்ளிகள் இப்படி இயங்குகிறது என்பதை ஆய்வு செய்து உடனடியாக சாதிய பெயரை நீக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.