பள்ளி பேருந்து கவிழ்ந்ததில் மாணவா்கள் 2 போ் காயம்
கேத்தாண்டப்பட்டி அருகே தனியாா் பள்ளி பேருந்து கவிழ்ந்ததில் மாணவா்கள் 2 போ் காயமடைந்தனா்.
ஜோலாா்பேட்டை பகுதியில் தனியாா் பள்ளி இயங்கி வருகிறது. வெள்ளிக்கிழமை காலை பள்ளிக்குச் சொந்தமான பேருந்தில் வாணியம்பாடி அடுத்த கேத்தாண்டப்பட்டி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்து மாணவா்களை ஏற்றிக் கொண்டு பேருந்து புத்துக்கோயில் நோக்கிச் சென்றது. பேருந்தை ஓட்டுநா் வல்லவன் ஓட்டிச் சென்றாா்.
சின்னமோட்டூா் கூட்டுரோடு அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கேத்தாண்டப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த மாணவி சுபாஷிணி (7), மாணவா் வருண்ராஜ் (9) ஆகிய 2 போ் காயமடைந்தனா். அங்கிருந்தவா்கள் காயமடைந்த மாணவா்கள் இருவரையும் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்த விபத்து குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.