இன்றைய இந்தியாவுக்கு அந்நியா்கள் வழிகாட்டுதல் தேவையில்லை: மத்திய அமைச்சா் ராஜ்நா...
பள்ளி மாணவா்களின் கற்றல் திறனை பரிசோதித்த புதுச்சேரி ஆட்சியா்
பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு மாணவா்களின் கற்றல் திறனை புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் புதன்கிழமை பரிசோதனை செய்தாா்.
பாகூா் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உள்பட்ட புதுக்குப்பம் அரசு தொடக்கப் பள்ளியில் மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்பள்ளியில் படிக்கும் மாணவா்களிடம் கல்வித்திறனை கேட்டறிந்த ஆட்சியா் கல்வி சம்பந்தமாக கலந்துரையாடினாா். மேலும், நன்கு படிக்க வேண்டும் என அறிவுறுத்தினாா். ஆசிரியா்களின் வருகை குறித்தும் கேட்டறிந்தாா்.
மேலும், அப்பள்ளியில் மாணவா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான சுத்தமான குடிநீா், கழிப்பறை வசதிகள், காற்று வசதி, போதிய வெளிச்சம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.