செய்திகள் :

பள்ளிப்பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்ட 2-ஆம் வகுப்பு மாணவன் பின்பக்க சக்கரம் ஏறியதில் பலி!

post image

பெங்களூரு: பள்ளிப்பேருந்தில் கதவு சரியாக மூடாததால் பேருந்திலிருந்து கீழே விழுந்த சிறுவன் மீது பேருந்து சக்கரம் ஏறி இறங்கியதில் உயிரிழந்தார்.

பெங்களூரிலுள்ள ஒரு பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வந்த எல். ராஜத் என்ற 7 வயது சிறுவன் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

பெங்களூரிலுள்ள ஜனதா காலனி பகுதியில் அந்த மாணவனின் வீடு அமைந்துள்ளது. கொல்லேகல் பகுதியைச் சேர்ந்த அவரது பெற்றோர் கூலித் தொழிலாளிகளாக வேலை செய்து வருகின்றனர்.

இந்தநிலையில், ராஜத்தும் அவரது சகோதரியும் வழக்கம்போல் கடந்த வெள்ளிக்கிழமையும்(ஜூலை 18) பள்ளியிலிருந்து பேருந்தில் தங்களது வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். ஓட்டுநர் ஆர். விநோத் (35) பள்ளிப் பேருந்தை இயக்கியுள்ளார்.

அந்த பேருந்தில் குழந்தைகளை கண்காணிக்க ஒரு பெண் பணியாளரும் இருந்திருக்கிறார். மொத்தம் 30 குழந்தைகள் பேருந்தில் சென்றதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், ராஜத்தும் அவரது சகோதரியும் வீட்டில் இறக்கிவிடப்படுவதற்கு முன்னரே, அந்த பெண் பணியாளர் பேருந்திலிருந்து இறங்கி தமது இல்லத்துக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், மேற்கண்ட இரு குழந்தைகளுடன் விநோத் வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. அப்போது பேருந்தின் வாயிற்கதவு சரியாக மூடப்படாததால் வாயில் அருகே இருந்த சீட்டில் அமர்ந்திருந்த ராஜத்திடம், கதவை இழுத்து மூடும்படி விநோத் பணித்துள்ளார்.

அதன்படியே கதவருகே சென்ற ராஜத், பேருந்தின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் நிலைதடுமாறி பேருந்திலிருந்து வெளியே விழுந்துள்ளார். அதில் பேருந்தின் பின்பக்க சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியுள்ளது.

உடனடியாக ராஜத்தை மீட்ட அக்கம்பக்க்த்தினர், அருகிலிருக்கும் தனியார் மருத்துவமனையொன்றில் அவரை சேர்த்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து கைது செய்யப்பட்டுள்ள பேருந்து ஓட்டுநர் மீது பிணையில் வெளிவராத பிரிவுகளில் கொலை வழக்கு பதிந்து விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

Karnataka school boy died after falling from moving bus

அமா்நாத் யாத்திரை: ஜம்முவிலிருந்து 20ஆவது குழு புறப்பட்டது !

அமர்நாத் குகைக் கோயிலுக்கு 4,388 பேர் கொண்ட 20 ஆவது குழு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.காஷ்மீரின் இமயமலையில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகைக் கோயிலில் இயற்கையா... மேலும் பார்க்க

தீர்ப்புகளில் செய்யறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தக் கூடாது: கேரள உயர்நீதிமன்றம்

நீதிமன்ற தீர்ப்புகள், உத்தரவுகளில் செய்யறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தக் கூடாது என்று நீதிமன்றங்களுக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செய்யறிவு தொழில்நுட்பம்(ஏ.ஐ.) இப்போது அனைத்துத் துறைகளிலு... மேலும் பார்க்க

அகமதாபாத்தில் வீட்டில் இருந்து தம்பதியர், 3 குழந்தைகளின் சடலங்கள் மீட்பு !

அகமதாபாத்தில் தம்பதியர் மற்றும் அவர்களது 3 குழந்தைகள் வீட்டில் இருந்து சடலங்களாக கண்டெடுக்கப்பட்டனர்.குஜராத்தின் அகமதாபாத் மாவட்டத்தில் வீடு ஒன்றில் இருந்து தம்பதியினரின் உடல்களும், அவர்களது மூன்று கு... மேலும் பார்க்க

உ.பி.யில் சி.ஆர்.பி.எஃப் வீரர் மீது தாக்குதல்: 3 கன்வாரியாக்கள் கைது

உ.பி.யில் சி.ஆர்.பி.எஃப். வீரர் மீது தாக்குதல் நடத்திய 3 கன்வாரியாக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம், பிரம்மபுத்ரா ரயிலில் ஜார்க்கண்டில் உள்ள பைத்யநாத் தாம் செல்வதற்காக கன்வாரியாக்க... மேலும் பார்க்க

மழைக்காலக் கூட்டத்தொடர்: அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது!

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரையொட்டி அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நாளை(ஜூலை 21) தொடங்கி ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மழைக்காலக... மேலும் பார்க்க

கன்வார் யாத்திரை பக்தர்கள் மீது ஹெலிகாப்டரிலிருந்து மலர்கள் தூவி உபசரிப்பு: உ.பி. அரசு ஏற்பாடு

உத்தரப் பிரதேத்தில் கன்வார் யாத்திரை பக்தர்களை உற்சாகப்படுத்த ஹெலிகாப்டரிலிருந்து மலர்கள் தூவி உபசரிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களுக்கு பக்தர்கள் நடைப்பயணமாகச் ... மேலும் பார்க்க