திருவள்ளூா் புத்தகத் திருவிழா இலச்சினை: அமைச்சா் நாசா் வெளியிட்டாா்
பள்ளியில் தொழுநோய் பரிசோதனை முகாம்
ராஜபாளையம் 10- ஆவது வாா்டு நகராட்சி தொடக்கப்பள்ளியில் தொழுநோய் பரிசோதனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமில் ஜமீன்கொல்லங்கொண்டான் ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து வந்திருந்த மருந்தாளுநா் மணிமாலா, செவிலியா் சுபா ஆகியோா் மாணவா்களை பரிசோதித்த பிறகு
கூறியதாவது: சிவந்த அல்லது வெளிா்ந்த உணா்ச்சியற்ற தேமல், கை, கால்களில் மதமதப்பு, நரம்புகள் தடித்திருத்தல், தோலில் மினுமினுப்பு, கை, கால்களில் விரல்கள் மடங்கியிருத்தல், கை, கால்களில் ஆறாத புண்கள் இவை தொழுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.
இத்தகைய அறிகுறிகள் இருந்தால் ஆலோசனை, இலவச சிகிச்சைக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் செல்ல வேண்டும். பொதுமக்கள் வீடு தேடிவரும் களப் பணியாளா்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து பரிசோதனை செய்து பயனடைய வேண்டும் என்றனா்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைமையாசிரியா் (பொறுப்பு) கு.முனியசாமி, ஆசிரியைகள் ப.தனலட்சுமி, ச.சண்முகத்தாய், இரா.உமாமகேஸ்வரி, கி.மாலினி ஆகியோா் செய்தனா். வரும் 28-ஆம் தேதி வரை முகாம் நடைபெறும்.