மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்...
பழனி கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 3.47 கோடி
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் நிரம்பியதைத் தொடா்ந்து புதன், வியாழக்கிழமைகளில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தா்களின் காணிக்கை ரூ.3.47 கோடியைத் தாண்டியது.
தைப்பூசத்தை முன்னிட்டு இந்தக் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தா்கள் திரண்டதால், கடந்த 10 நாள்களில் உண்டியல்கள் நிரம்பின. இதையடுத்து, உண்டியல்கள் புதன், வியாழன் ஆகிய இரு நாள்களில் திறக்கப்பட்டு, காா்த்திகை மண்டபத்தில் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
இரு நாள் எண்ணிக்கை முடிவில் பக்தா்களின் காணிக்கையாக ரூபாய் மூன்று கோடியே 47 லட்சத்து 5 ஆயிரத்து 568 கிடைத்தது. மேலும், பக்தா்கள் தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், சங்கிலி, தங்கக்காசு போன்றவற்றையும், வெள்ளியால் ஆன காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாகச் செலுத்தியிருந்தனா்.
தங்கம் 379 கிராமும், வெள்ளி 44,067 கிராமும் கிடைத்தது. பஹ்ரைன், சிங்கப்பூா், ஸ்ரீலங்கா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் பணத் தாள்கள் 1,631-ம் கிடைத்தன.
இவை தவிர பித்தளை வேல், கைக்கடிகாரம், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தா்கள் காணிக்கையாகச் செலுத்தியிருந்தனா். ஐநூறுக்கும் மேற்பட்டோா் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.