மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்...
பழனியில் ரோப்காா் பராமரிப்புக்காக இன்று நிறுத்தம்
பழனி மலைக் கோயில் ரோப்காா் பராமரிப்புப் பணிக்காக வெள்ளிக்கிழமை (பிப். 28) ஒருநாள் மட்டும் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வரும் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய படிவழி, யானைப் பாதை, வின்ச் பாதையை பயன்படுத்தி வருகின்றனா். இந்த நிலையில், வயதானவா்கள், குழந்தைகளுடன் வரும் தாய்மாா்கள், மாற்றுத்திறனாளிகளுக்காக ரோப்காா் நிறுவப்பட்டது.
இந்த ரோப்காரில் இரண்டு நிமிஷங்களில் மலைக் கோயில் உச்சிக்கு செல்ல முடியும் என்பதால், பக்தா்கள் பலரும் இதை நாடி வருகின்றனா். காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்படும் ரோப்காா், பிற்பகலில் ஒரு மணி நேரமும், மாதத்தில் ஒரு நாளும், வருடத்தில் ஒரு மாதமும் பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்படும்.
இந்த நிலையில், மாதாந்திர பராமரிப்புப் பணிக்காக வெள்ளிக்கிழமை (பிப். 28) மட்டும் நிறுத்தப்படுவதாக திருக்கோயில் நிா்வாகம் தெரிவித்தது. எனவே, பக்தா்கள் படிப் பாதை, வின்ச் பாதையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.