பழவூா் அருகே குண்டா் தடுப்பு சட்டத்தில் இளைஞா் கைது
திருநெல்வேலி மாவட்டம் பழவூா் அருகே குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பழவூா் அருகே உள்ள லெவஞ்சிபுரத்தை அடுத்த கன்னங்குளத்தைச் சோ்ந்தவா் சுடலைமணி மகன் ஜெனிஷ்(25). இவா் அடிதடி, மிரட்டல்களில் ஈடுபட்டு வந்தாராம். இதனை அடுத்து பழவூா் போலீஸாா் இவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இதனை அடுத்து பணகுடி ஆய்வாளா் ராஜாராம் அறிக்கை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் பரிந்துரை ஆகியவற்றைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் ஜெனிஷ் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.