Ilayaraja: "அண்ணன் ஆசையை நான் நிறைவேற்றிட்டேன்’’ - யேசுதாஸிற்காக இளையராஜா செய்த...
பாகிஸ்தானில் ஒரே ஆண்டில் 7 பயிற்சியாளர்கள் மாற்றம்..! என்ன நடக்கிறது?
கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தானின் டி20, ஒருநாள் அணிகளுக்கு தலைமைப் பயிற்சியாளராக கேரி கிறிஸ்டனும் டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக ஆஸி. முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஜேசன் கில்லெஸ்பியும் நியமிக்கப்பட்டார்கள்.
அனைத்து வடிவிலான போட்டிகளுக்கும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அஸார் மஹ்மூத் உதவிப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
2 மாதங்களுக்கு முன்பு கேரி கிறிஸ்டன் தனது ராஜிநாமாவை அறிவித்தார். இந்த நிலையில், டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜேசன் கில்லெஸ்பியும் தனவு ராஜிநாமாவை அறிவித்துள்ளார்.
இதனால், பாகிஸ்தான் அணியின் மீதான அதிருப்தி அதிகரித்துள்ளது.
முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஆகிப் ஜாவேத் இடைக்கால தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் சர்வதேச கிரிக்கெட்டில் அற்புதமான பல வீரர்களை உருவாக்கியுள்ளார்கள். 2025இல் சாம்பியன்ஸ் டிராபியையும் நடத்தவிருக்கிறார்கள்.
சமீபகாலமாக பாகிஸ்தான் அணியின் கேப்டன்கள் மாற்றம், பயிற்சியாளர்கள் திடீரென ராஜிநாமா செய்வது அதிகரித்துள்ளது.
ஒரு வருடத்தில் 8ஆவது தலைமைப் பயிற்சியாளராக ஆகிப் ஜாவேத் நியமிக்கப்பட்டுள்ளார். சிலர் மோசமான தோல்விகளால் விலகினர். சிலர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடனான பிரச்னைகளால் விலகியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.