``ஸ்டாலின் துரோகி; வன்னியர்களின் ஒரு ஓட்டு கூட திமுகவுக்கு கிடையாது'' - கொந்தளிக...
பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட மூத்த வீரர்கள் மறுப்பு: லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் ரத்து!
இந்தியா - பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற மூத்த வீரர்கள் பங்கேற்கும் லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் ஆட்டம் ரத்தாகியுள்ளது.
லெஜெண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர் கடந்த ஜூன் 18-ஆம் தேதி ஆரம்பித்தது. ஆகஸ்ட் 2-இல் இறுதி ஆட்டம் நடைபெற உள்ளது.
யுவராஜ் சிங் தலைமையிலான இந்திய மூத்த வீரர்களின் ’இந்தியா சாம்பியன்ஸ்’ அணியில்:
ஷிகர் தவான்
ஹர்பஜன் சிங்
சுரேஷ் ரெய்னா
இர்ஃபான் பதான்
யூசுஃப் பதான்
ராபின் உத்தப்பா
அம்பத்தி ராயுடு
பியூஷ் சாவ்லா
ஸ்டூவார்ட் பிண்னி
வருண் ஆரோன்
வினய் குமார்
அபிமன்யு மிதுன்
சித்தார்த் கௌல்
குர்க்க்ரீத் மான் ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்தநிலையில், லெஜெண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 20) பர்மிங்ஹாமில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த ஆட்டத்தில் இந்தியா சாம்பியன்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த ஷிகர் தவான், ஹர்பஜன் சிங் உள்ளிட்ட சில முக்கிய வீரர்கள் விலகினர்.
ஜம்மு காஷ்மீரின் முக்கிய சுற்றுலா தலமான பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானே காரணம் என்று குற்றஞ்சாட்டி இந்திய மூத்த வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக கிரிக்கெட் விளையாட மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் இந்த ஆட்டம் ரத்தாகியுள்ளது.