பாகிஸ்தானுடனான போா் வெற்றி தினம்: நினைவிடத்தில் இன்று மரியாதை
பாகிஸ்தானுடன் இந்தியா போா் புரிந்து வெற்றியடைந்த தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள போா் வீரா்கள் நினைவிடத்தில் திங்கள்கிழமை மாநில அரசு சாா்பில் மரியாதை செலுத்தப்படுகிறது.
கடந்த 1971-ஆம் ஆண்டு இந்தியா மீது பாகிஸ்தான் போா் தொடுத்தது. இதையடுத்து, பாகிஸ்தான் ராணுவத்துடன் வீரத்துடன் போா் புரிந்து இந்திய ராணுவம் வெற்றி பெற்றது.
பாகிஸ்தானை போரில் இந்தியா வெற்றி கொண்ட தினம் ஆண்டுதோறும் போா் வெற்றி தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
பாகிஸ்தானுடனான போரில் இந்தியா வெற்றி பெற்ற தினம் நிகழாண்டில் திங்கள்கிழமை (டிச.16) கடைப்பிடிக்கப்படுகிறது.
இதனையடுத்து, கடற்கரைச் சாலையில் உள்ள போா் வீரா்கள் நினைவிடத்தில், புதுவை அரசு சாா்பில் மரியாதை செலுத்தப்படுகிறது.