செய்திகள் :

பாகிஸ்தான்: சிந்து நதி டெல்டாவிலிருந்து 12 லட்சம் மக்கள் வெளியேற்றம்; எழுந்த அச்சம்- பின்னணி என்ன?

post image

பாகிஸ்தானின் சிந்து நதி டெல்டா பகுதி, மக்கள் வாழத் தகுதியான இடமா எனக் கேள்வி எழுப்பும் வகையில் மிகப் பெரிய சிக்கலை சந்தித்து வருகிறது. இதில் இந்தியாவின் பங்கும் உள்ளது.

பாகிஸ்தானின் தெற்கில் சிந்து நதி அரேபிய கடலை அடையும் டெல்டா பகுதியில், கடல் நீர் உள் வருவதனால் பல கிராமங்கள் தீவுகளாக சுருங்கியும் மூழ்கியும் வருகின்றன. பலர் வீடுகளை இழந்து ஊள்நாட்டு அகதிகளாக இடம்பெயர்கின்றனர். விவசாயமும், இறால் வளர்ப்பும், மீன் பிடிக்கும் தொழிலும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக காரோ சான் நகரில் அப்துல்லா மிர்பஹர் கிராமத்தில் 150 வீடுகள் இருந்த நிலையில், இப்போது நான்கு மட்டுமே எஞ்சியிருப்பதாக அரப் நியூஸ் தளம் கூறுகிறது. அவர்களும் கிராமத்தை விட்டு நகரங்களுக்கு இடம்பெயரும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 

வெளியேறிய 12 லட்சம் மக்கள்

Pakistan Refugee
Pakistan Refugee

காரோ சான் நகரைச் சுற்றியிருந்த 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் பல இப்போது இல்லை. நகரின் மக்கள் தொகை 2023ம் ஆண்டில் 26,000 ஆக இருந்து, இப்போது 11,000 ஆக குறைந்துள்ளது. கடந்த இரண்டு தசாப்தங்களில் சிந்து நதியின் டெல்டா பகுதியிலிருந்து 12 லட்சம் மக்கள் வெளியேறியிருப்பதாக 2025 மார்ச் மாதம் வெளியான புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

திபெத்தில் தொடங்கி காஷ்மீர் வழியாக பாகிஸ்தான் முழுவதும் ஓடும் சிந்து நதியில் அமைக்கப்பட்ட நீர்ப்பாசன கால்வாய்கள், நீர்மின் அணைகள் மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களான பனிப்பாறைகள் உருகுதல் ஆகியவற்றின் விளைவாக, 1950களில் இருந்து டெல்டாவிற்குள் நீர் ஓட்டம் 80 சதவீதம் குறைந்துள்ளது என்று, அமெரிக்க-பாகிஸ்தான் நீர் மேம்பட்டு ஆய்வுகள் மையத்தின் 2018 ஆம் ஆண்டு ஆய்வு தெரிவிக்கிறது.

Indus River
Indus River

இதனால் ஊர்களை அழிக்கும் வகையில் கடல் நீர் உள்நுழைந்துள்ளது. 1970ம் ஆண்டு இருந்ததை விட நீரின் உப்புத்தன்மை 70% அதிகரித்துள்ளது. 

சிந்து நதியை மோசமாக்கிய நீர் மின் திட்டங்கள்

பொதுவாக வளமான வண்டல் மண்ணை ஆறுகள் டெல்டாவில் வந்து சேமிப்பதனால், அங்கு விவசாயம் செழிப்பானதாக இருக்கும். இங்கோ கடல் நீர் உள்நுழைவினால் பரந்த அளவில் விளைநிலங்கள் தரிசாகிவிட்டன. 

சிந்து நதியில் ஆங்கிலேயர்கள் முதலில் கால்வாய்களையும் அணைகளையும் கட்டினர். சுதந்திரத்துக்குப் பிறகு தொடங்கப்பட்ட பல நீர்மின் திட்டங்கள் நிலைமையை இன்னும் மோசமாக்கியிருக்கின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ராணுவம் தொடங்கிய கால்வாய் திட்டங்கள் சிந்து மாகாணத்தில் உள்ள விவசாயிகள் போராட்டத்தால் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உப்புநீர் உள்ளே வருவதை. இயற்கையாக தடுக்கும் வகையில் சதுப்பு நிலக் காடுகளை மீண்டும் உருவாக்கும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது சிந்து மாகாண அரசாங்கம். 

இந்தியாவின் நடவடிக்கையால் மக்கள் அச்சம்

இதற்கு இடையில் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தியுள்ள இந்தியாவின் முடிவு மேலும் அச்சத்தைக் கூட்டியிருக்கிறது. இதனை பாகிஸ்தான் “போர் நடவடிக்கை” என எச்சரித்தபோதிலும் இந்தியா பின் வாங்காததால் மீனவர்கள், விவசாயிகள், இறால் வளர்ப்பு பண்ணைகள் வாழ்வாதாரத்தை இழக்கும் அச்சத்தில் உள்ளனர். முன்னதாக பாகிஸ்தான் சிந்து நதி நீரை 20 கோடி மக்கள் நம்பியிருப்பதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

“யாரும் விருப்பப்பட்டு சொந்த ஊரை விட்டு வெளியேறுவதில்லை. நாங்கள் எங்கள் நிலங்களை மட்டுமல்ல கலச்சாரத்தையும் இழந்துவருகிறோம்” என அரப் நியூஸில் பேசியுள்ளார் வீட்டையும் முன்னோர்களின் கல்லறைகளையும் விட்டு வெளியேறும் ஒருவர்!

இந்தியா மீதான வரியை 50 சதவிகிதமாக உயர்த்திய ட்ரம்ப்; இந்தியாவின் முதல் ரியாக்‌ஷன் என்ன?

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ஏற்பட்ட இந்தியா - பாகிஸ்தான் மோதலை வர்த்தகத்தை முன்வைத்து நான்தான் முடிவுக்கு கொண்டு வந்தேன் எனத் தொடர்ச்சியாகக் கூறிவரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கடந்த சில நா... மேலும் பார்க்க

”பாஜக தலைவரான பிறகும் ஜெயலலிதா தொண்டர் மனநிலையில் இருக்கிறார் நயினார் நாகேந்திரன்”-டி.டி.வி.தினகரன்

திருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அ.ம.மு.க செயல்வீரர்கள் கூட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக டி.டி.வி.தினகரன்... மேலும் பார்க்க

'தூய்மைப் பணியாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு கொடுக்க கூட மனசில்ல...' - கொந்தளிக்கும் போராட்டக் குழு!

'பத்திரிகையாளர் சந்திப்பு!'சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராடிக் கொண்டிருக்கும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் ஆறாவது நாளை எட்டியிருக்கிறது. இன்றுதான் அரசு சார்பில் அமைச்சர்களும் அதிகாரிகளும் மே... மேலும் பார்க்க

"அரசு வங்கிகளின் தலைமை நிர்வாகிகளில் SC, ST, சிறுபான்மையினர் ஒருவர் கூட இல்லை" - சு.வெங்கடேசன்

அரசு வங்கிகளின் தலைமை நிர்வாகிகளில் எஸ்.சி, எஸ்.டி, சிறுபான்மை மற்றும் பெண்கள் ஒருவர் கூட இல்லை என்று மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், "அரசு வங்கி... மேலும் பார்க்க

உ.பி. வெள்ளப் பாதிப்பு: "கங்கை உங்களைச் சொர்க்கத்துக்குக் கூட்டிச் செல்லும்" - பாஜக அமைச்சர் பேச்சு

உத்தரப்பிரதேசத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிடச் சென்ற பாஜக அமைச்சர் சஞ்சய் நிஷாத், பாதிக்கப்பட்டவர்களிடம் கங்கை நதி உங்களைச் சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லும் என்று சர்ச்சைக்குரிய வகையில் ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: "போராடுபவர்களைத் தவறான வழியில் திசை திருப்புகின்றனர்" - சேகர் பாபு

சென்னையில் துப்புரவுப் பணிகள் தனியார் மயமாவதை எதிர்த்து ரிப்பன் மாளிகைக்கு வெளியில் பணியாளர்கள் போராடி வரும் சூழலில், அதுகுறித்து செய்தியாளர்களிடம் விளக்கியுள்ளார் அமைச்சர் சேகர் பாபு.முறையாகத் தகவல் ... மேலும் பார்க்க