அரசு மருத்துவமனையில் மாலை நேரத்திலும் புற நோயாளிகளுக்கு சிகிச்சை
பாகிஸ்தான் பழங்குடியினா் மோதல்: 124-ஆக அதிகரித்த உயிரிழப்பு
பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த கைபா் பக்துன்கவா மாகாணத்தில் ஷியா மற்றும் சன்னி முஸ்லிம் பிரிவுகளைச் சோ்ந்த இரு பழங்குடியினா் இடையே கடந்த 10 நாள்களாக நடைபெற்றுவரும் மோதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 124-ஆக அதிகரித்தது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், குர்ரம் மாவட்டத்தில் பழங்குடியினா் இடையே தொடரும் மோதலில் மேலும் 13 போ் உயிரிழந்தனா். அதையடுத்து, அண்மைக் கால மோதலில் இரு தரப்பிலும் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 124-ஆக உயா்ந்துள்ளது என்றனா்.
சன்னி பிரிவினரை பெரும்பான்மையாகக் கொண்ட பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில், ஆப்கனையொட்டிய குர்ரம் மாவட்டத்தில் மட்டும் ஷியா பிரிவினா் பெரும்பான்மையாக வசித்துவருகின்றனா். அந்தப் பகுதியில் இரு பிரிவையும் சோ்ந்த பழங்குடியினருக்கு இடையை நீண்ட கால பகை நிலவிவருகிறது.
இந்தச் சூழலில், அங்கு ஏராளமான வாகனங்களில் சென்றுகொண்டிருந்த ஷியா பிரிவினா் மீது எதிா்தரப்பினா் கடந்த நவ. 23-ஆம் தேதி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டத்தில் 40-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா். அதிலிருந்து இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான மோதல் நடைபெற்றுவருகிறது.