2026 பேரவைத் தேர்தலிலும் இபிஎஸ் படுதோல்வி அடைவார்: அமைச்சர் கே.என்.நேரு
பாகிஸ்தான் வான்வழிப் பாதைகள் 2 நாள்களுக்கு மூடல்!
பாகிஸ்தான் நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வான்வழிப் பாதைகள் இரண்டு நாள்களுக்கு மூடப்படுவதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானின் விமான நிலைய ஆணையம், அந்நாட்டின், சில தேர்ந்தெடுக்கப்பட்ட வான்வழிப் பாதைகள் ஜூலை 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மூடப்படும் என அறிவித்துள்ளது.
இதுகுறித்து, வெளியான அறிக்கையில், காராச்சி மற்றும் லாஹுர் விமானத் தகவல்கள் செயல்பாட்டுக் காரணங்களினால், சில தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களின் தரைமட்டத்தில் இருந்து வானில் சில தூரம் வரையில் கிடைக்கவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.
இத்துடன், அந்த வான்வழிப் பாதைகள் வழியாக எந்தவொரு ராணுவம் மற்றும் பயணிகள் விமானம் ஆகியவை பயணிக்க அனுமதியில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த திடீர் நடவடிக்கைக்கான காரணம் என்னவென்று அந்நாட்டு அதிகாரிகள் விவரமாகக் கூறவில்லை. மூடப்படும் என அறிவிக்கப்பட்ட வான்வழிப் பாதைகளுக்கு பதிலாக மாற்றுப்பாதைகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: அரசியலை ஒருபோதும் விரும்பவில்லை, ஆனால்: எலான் மஸ்க்