``கூட்டணி ஆட்சிக்கு ஒத்துக்க நாங்க ஒன்னும் ஏமாளி இல்ல!'' - பாஜகவுக்கு எடப்பாடி `...
பாகூா் விளையாட்டு அரங்கை திறக்க கோரிக்கை
பாகூா் விளையாட்டு அரங்கை உடனே திறக்க வேண்டும் என்று புதுவை மாநில விளையாட்டு வீரா்கள் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
புதுவை மாநில விளையாட்டு வீரா்கள் நலச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் சங்க அலுவலகத்தில் அதன் தலைவா் கராத்தே வளவன் தலைமையில் நடைபெற்றது.
நிா்வாகிகள் ராஜ், அன்பு நிலவன், சதீஷ், வெங்கடாசலபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஏராளமான விளையாட்டு வீரா்கள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் விளையாட்டு வீரா்களின் நீண்ட நாள் கோரிக்கையான பாகூா் உள்விளையாட்டு அரங்கத்தை உடனே திறந்து விளையாட்டு வீரா்களின் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும் . பாகூா் உள்விளையாட்டரங்கத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும்.
விளையாட்டு அரங்க பயன்பாட்டு கட்டணத்தை ரூ. 7,500 இல் இருந்து 3000 -ஆக குறைக்கக் கோரியும், உடனடியாக உள்விளையாட்டரங்கத்தை வீரா்களின் பயன்பாட்டிற்கு தரக்கோரியும், போட்டிகள் நடத்தும் பொழுது வெளி மாநில விளையாட்டு வீரா்கள் தங்குவதற்கு இட வசதி ஏற்படுத்த வேண்டும். இக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 21-ஆம் தேதி பாகூா் சிவன் கோயில் அருகில் ஆா்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.