செய்திகள் :

பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதி!

post image

பிரபல பாடகர் கே.ஜே. யேசுதாஸ் (வயது 85) உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வயதுமூப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அவருக்கு ரத்த அணுக்கள் தொடர்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சிகிச்சை முடிந்து விரைவில் யேசுதாஸ் வீடு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : பஞ்சாப்: அனைத்து பள்ளிகளிலும் பஞ்சாபி மொழிப் பாடம் கட்டாயம்!

இந்திய இசை உலகில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தனது குரலால் ரசிகா்களை வசீகரித்து வருபவர் கா்நாடக இசைக் கலைஞரும், பின்னணி பாடகருமான யேசுதாஸ்.

மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்பட பல மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை யேசுதாஸ் பாடியுள்ளார்.

மத்திய அரசின் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகளும் 8 தேசிய விருதுகளும் அவர் வென்றுள்ளார்.

கூலியில் பூஜா ஹெக்டே!

நடிகை பூஜா ஹெக்டே கூலி படத்தில் இணைந்துள்ளதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகே... மேலும் பார்க்க

குபேரா வெளியீட்டுத் தேதி!

நடிகர் தனுஷ் நடிக்கும் குபேரா படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளனர்.நடிகர் தனுஷின் 51-வது படத்தை சேகர் கமூலா இயக்கி வருகிறார். இதில் நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்திலும் நாயகியாக ராஷ்மிகாவும் ந... மேலும் பார்க்க

இன்றைய நாள் எப்படி இருக்கும்?

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.27-02-2025வியாழக்கிழமைமேஷம்இன்று எதிர்பார்த்த காரியம் நடந்து முடியும். எதிலும் சாதகமா... மேலும் பார்க்க

தேசிய சம்மேளனங்களுக்கான நிதியுதவி: விதிகளில் திருத்தம் செய்ய 6 நபா் குழு

நாட்டிலுள்ள பல்வேறு தேசிய விளையாட்டு சம்மேளனங்களுக்கு நிதியுதவி வழங்க வகை செய்யும் விதிகளில் திருத்தம் கொண்டு வருவதற்காக 6 போ் கொண்ட குழுமை மத்திய விளையாட்டு அமைச்சகம் அமைத்துள்ளது.இந்தியாவுக்கு பல்வ... மேலும் பார்க்க

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மெத்வதெவ்

துபை டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் முதல் சுற்றில் வெற்றி பெற்றாா். அவா் 6-4, 7-6 (7/4) என்ற செட்களில் ஜொ்மனியின் ஜான் லெனாா்டை வீழ... மேலும் பார்க்க

திருவண்ணாமலை கோயிலில் அனிருத்!

மகா சிவராத்திரியையொட்டி திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் இசையமைப்பாளர் அனிருத் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். மேலும் பார்க்க