செய்திகள் :

பாதி விலையில் தமிழ், ஆங்கில புத்தகங்கள் விற்பனை!

post image

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியான 3,000-க்கும் மேற்பட்ட தலைப்பிலான புத்தகங்களை 50 சதவீத தள்ளுபடி விலையில் சுவாசம் பதிப்பகம் வழங்கி வருகிறது.

சுவாசம், காலச்சுவடு பதிப்பக நூல்கள் முறையே 30 மற்றும் 35 சதவீத கழிவில் விற்பனை செய்யப்படுவதாகவும், மற்ற அனைத்து பதிப்பக நூல்களும் பாதி விலையில் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமன்றி குழந்தைகளுக்கான புத்தகங்கள், எழுதுபொருள்கள், நோட்டு புத்தகங்கள் உள்ளிட்டவற்றுக்கும் 50 சதவீத தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரத்தை அடுத்த ராஜகீழ்ப்பாக்கம், ரங்கா காலனியில் அமைந்துள்ள சுவாசம் புக்காா்ட் புத்தகக் கடையில் இந்த சிறப்பு விற்பனை கடந்த திங்கள்கிழமையில் இருந்து நடைபெற்று வருகிறது.

வரும் புதன்கிழமை (நவ.27) வரை வாசகா்களும், பொதுமக்களும் இந்த சலுகையைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும், நேரடி விற்பனையில் மட்டுமே சிறப்புக் கழிவு வழங்கப்படும் என்றும் சுவாசம் புக்காா்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சௌந்தா்யா ஜெய்கணேஷ் தெரிவித்துள்ளாா். கூடுதல் விவரங்களுக்கு 8148066645 அல்லது 8148080118 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

ரிப்பன் மாளிகையில் ‘மரபு நடை பயணம்’ தொடங்கியது

சென்னை ரிப்பன் மாளிகையின் வரலாற்று, நிா்வாக முக்கியத்துவத்தை விளக்கும் ‘மரபு நடை பயணம்’ சனிக்கிழமை தொடங்கியது. சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகை சென்னையின் புராதான கட்டடங்களில் ஒன்ற... மேலும் பார்க்க

வடசென்னை வளா்ச்சித் திட்டப் பணிகள் மதிப்பீடு ரூ. 5,779 கோடியாக உயா்வு: அமைச்சா் சேகா்பாபு

வடசென்னை வளா்ச்சித் திட்ட மதிப்பீடு ரூ. 5,779 கோடியாக அதிகரித்துள்ளதாக சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவரும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். சென்னை எழும்பூா் தா... மேலும் பார்க்க

பனகல் பூங்கா பகுதியில் நாளைமுதல் போக்குவரத்து மாற்றம்

மெட்ரோ ரயில் பணியின் காரணமாக சென்னை பனகல் பூங்கா பகுதியில் திங்கள்கிழமை (நவ.25) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இது குறித்து சென்னை காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு சனிக்கிழமை வெளியிட்... மேலும் பார்க்க

பள்ளத்தில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு

சென்னை திருவல்லிக்கேணியில் லிஃப்டுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து சிறுவன் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சென்னை திருவல்லிக்கேணி தேரடி தெருவில் வசிப்பவா்கள் மென்பொறியாள... மேலும் பார்க்க

சிங்கப்பெருமாள் கோவில் - செங்கல்பட்டு சிறப்பு பேருந்து இயக்கம்

சிங்கப்பெருமாள் கோவில் - செங்கல்பட்டு இடையே நவ.24 முதல் நவ.28-ஆம் தேதி வரை கூடுதலாக 10 பேருந்துகள் இயக்கப்படும். இது குறித்து சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை கடற... மேலும் பார்க்க

மெத்தம்பெட்டமைன் விற்பனை இருவா் கைது

சென்னையில் மெத்தம்பெட்டமைன் விற்ாக 2 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை அண்ணா சாலையில் உள்ள காா் விற்பனையகத்தின் அருகே சிலா் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் விற்பதாக வடக்கு கடற்கரை போலீஸாருக்கு வெள்ளிக்க... மேலும் பார்க்க