டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை; அணியில் 11 பேரும் பந்துவீச்சு!
பாதிக்கப்பட்டுள்ளதால் ஆதரவு தெரிவித்தேன்..! தனுஷ் - நயன்தாரா பிரச்னை குறித்து பார்வதி விளக்கம்!
நடிகை நயன்தாராவின் 40-ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது திருமண காட்சிகளுடன் அவர்களது காதல் வாழ்க்கை குறித்து ஆவணப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டு, நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியிடப்பட்டது.
இதில் நானும் ரௌடிதான் படக்காட்சிகள், பாடலை பயன்படுத்த நடிகரும் தயாரிப்பாளருமான தனுஷ் வேண்டுமென்றே அனுமதி வழங்கமால் காலம் தாழ்த்தியதாக நயன்தாரா 3 பக்கம் கடிதம் வெளியிட்டிருந்தார்.
நடிகை நயன்தாராவுக்கு பல நடிகைகள் ஆதரவு தெரிவித்தார்கள். இந்த நிலையில் நடிகை பார்வதி இது குறித்து தானுமே பாதிக்கப்பட்டுள்ளதாகப் பேசியுள்ளார். அவர் பேசியதாவது:
பார்வதி கூறியதென்ன?
இது நீண்ட நேரம் யோசித்து எடுத்த முடிவில்லை. நான் பார்த்த உடனேயே நயன்தாரா பக்கம் நின்று ஆதரவு தெரிவிக்க வேண்டுமென தோன்றியது. அதனால் செய்தேன். நயன்தாரா அவராகவே உழைத்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற இடத்தைப் பிடித்துள்ளார். அவரைப் பற்றி அனைவருக்கும் தெரியும். அடிக்கடி நேர்காணல்கூட தருபவதில்லை நயன்தாரா. அவர் 3 பக்கத்துக்கு ஒரு கடிதம் எழுதுகிறார் என்றால் அதில் நிச்சயம் மதிப்பு இருக்கிறதே என்று அர்த்தம்.
நானுமே பாதிக்கப்பட்டிருக்கிறேன்
அவருடைய அனுபவங்களை 3 பக்கத்துக்கு எழுதுகிறார். அதனால் அதை திறந்த கடிதம் என்கிறோம். அதனால் எனக்கு ஆதரவு தெரிவிக்க தோன்றியது. இதில் நான் மட்டுமே முழுமையான ஆதரவு என்றும் சொல்லமுடியாது. நயனுக்கு ஆதரவு தெரிவித்த அனைவரும் அவர்பக்கம் நியாயம் இருப்பதாகவே நம்புகின்றனர். சில நேரங்களில் மற்றவர்களது பிரச்னைகளில் எங்களைப் பார்க்கிறோம். அதனால்தான் நாங்கள் ஆதரிக்கிறோம்.
அந்த நேரத்தில் ஆதரவு தெரிவிக்கவில்லை என்றால் எப்படியிருக்குமென எனக்குத் தெரியும். நானும் அதனை அனுபவித்து இருக்கிறேன். ஆதரவு ஒரு மனிதனை எவ்வளவு மாற்றும் என நானறிவேன். அந்தமாதிரி சிந்திக்கும்போது நான் எப்போதும் பாதிக்கப்பட்ட மக்கள் பக்கமே நிற்பேன். அதுவும் பெண்கள் என்றால் நான் நிச்சயமாக துணையாக இருப்பேன் என்றார்.
நடிகை பார்வதி நடிகர் தனுஷுடன் இணைந்து 2013இல் வெளியான மரியான் படத்திலும் நஸ்ரியா நையாண்டி (2013) படத்திலும் ஐஸ்வர்யா லக்ஷ்மி ஜகமே தந்திரம் (2021) படத்திலும் கௌரி கிஷன் கர்ணன் (2021) படத்திலும் நடித்திருந்தார்கள். இவர்கள் நயன்தாரா பதிவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நயன்தாரா ஆவணப்படத்தில் தான் தயாரித்த படத்தின் காட்சிகள் இடம் பெற்றிருப்பதால் ரூ. 10 கோடி கேட்டு தனுஷ் தொடா்ந்த வழக்கில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.