`சுனாமியால பாதிக்கப்பட்டு 21 வருஷம் ஆச்சு; இன்னும் வீடு கிடைக்கல.!’ - தீராத வேதன...
பாமக: "அவமானபட்டிருக்கேன்; யாரையும் சும்மா விடமாட்டேன்" - அன்புமணி ராமதாஸ் ஆவேசம்
சென்னை மகாபலிபுரத்தில் பாமக பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று( டிச.9) அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றிருக்கிறது.
அதில் பேசிய அன்புமணி ராமதாஸ், " இதுவும் கடந்துபோகும் என்று நானும் எவ்வளவோ விஷயங்களைத் தாங்கிக்கொண்டு இருக்கிறேன்.
அவமானங்களை சந்தித்துக்கொண்டிருக்கிறேன். மன உளைச்சலில் இருக்கிறேன். தூக்கத்தை தொலைத்திருக்கிறேன்.
இதெல்லாம் பாமக கட்சிக்காகவும், சமுதாயத்திற்காகவும் தான்.

அமைதியாக நானும் நம் வேலையைப் பார்க்கலாம் என்று நினைத்தாலும் கூட சில துரோகிகள் விடமாட்டேன் என்கிறார்கள்.
இந்த துரோகிகளை நான் ஒருபோதும் மன்னிக்கப்போவதில்லை. என்ன நடக்குமோ அது கண்டிப்பாக நடக்கும்.
இந்த மூன்று மாதங்களில் யாரெல்லாம் ஜெயிலுக்கு போகப்போகிறார்கள் என்று பார்க்கத்தானே போகிறீர்கள். நான் சும்மா விடப்போவதில்லை.
தைலாபுரத்தை இன்று திமுக ஆக்கிரமித்துவிட்டது. இதுதான் உண்மை நிலவரம்.
ஐயாவிடம் (ராமதாஸ்) சென்று அந்த துரோகிகள் தினமும் பொய் சொல்கிறார்கள்.

அவருக்கு 87 வயதாகிவிட்டது. முதுமை வந்துவிட்டது. அவர் குழந்தை மாதிரி ஆகிவிட்டார். சுற்றி என்ன நடக்கிறது என்று அவருக்கு தெரியவில்லை.
அவர்கள் சொல்லும் பொய்யை தான் ஐயா நம்பிக்கொண்டிருக்கிறார்" என்று ஆவேசமாகப் பேசியிருக்கிறார்.
















