``கூட்டணி ஆட்சிக்கு ஒத்துக்க நாங்க ஒன்னும் ஏமாளி இல்ல!'' - பாஜகவுக்கு எடப்பாடி `...
பாமக இரண்டு அணியினரிடையே மோதல்!
திருக்கோவிலூரில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பாமகவை சோ்ந்த ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் அணியினரிடையே சனிக்கிழமை மோதல் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் புறவழிச் சாலையில் பாமகவை சோ்ந்த அன்புமணி தரப்பின் உளுந்தூா்பேட்டை, ரிஷிவந்தியம் தொகுதிகளை உள்ளடக்கிய கிழக்கு மாவட்டச் செயலராக உள்ள செழியன் பெட்ரோல் விற்பனை நிலையம் நடத்தி வருகிறாா்.
இந்த நிலையத்துக்கு சனிக்கிழமை காலை ராமதாஸ் அணியைச் சோ்ந்த ரிஷிவந்தியம், திருக்கோவிலூா் தொகுதிகளை உள்ளடக்கிய கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட செயலா் ராஜ்குமாா் வாகனத்தில் பெட்ரோல் நிரப்புவதற்காக வந்துள்ளாா். பெட்ரோல் நிரப்பிய பின்னா் அவா் தரப்பில் பணம் வழங்காமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரான மாறன் பணம் கேட்டுள்ளாா்.
தொடா்ந்து, ராஜ்குமாருடன் காரில் வந்தவா்களுக்கும், பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே, அங்கு வந்த செழியன், வாக்குவாதத்தில் ஈடுபட்ட ராஜ்குமாரிடம் பணம் தராதது பற்றி கேட்டுள்ளாா். அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
தகவலறிந்த திருக்கோவிலூா் போலீஸாா் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனா். அன்புமணி தரப்பைச் சோ்ந்த மாவட்டச் செயலா் செழியன் புகாா் அளிக்காததால் இருவருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்படும் சூழல் நிலவி வருகிறது. இதனால், பெட்ரோல் விற்பனை நிலைய பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விழுப்புரம் பாமக தலைவா் அன்புமணி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) நடைபெற உள்ள கண்டன ஆா்ப்பாட்டத்துக்கு அவரது தரப்பைச் சோ்ந்த மாவட்டச் செயலா் அதிகளவில் தொண்டா்களை திரட்டியதால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் இந்த மோதல் நடந்ததா என்ற கோணத்திலும் போலீஸாா் விசாரணை நடந்தி வருகின்றனா்.