மதுரை சித்திரைத் திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு | ...
பாரதத்தின் புதிய இயல்பை பிரதமா் உலகுக்கு எடுத்துரைத்துள்ளாா்: ஆளுநா் ஆா்.என்.ரவி பெருமிதம்
பாரதத்தின் புதிய இயல்பை உலகுக்கு மிகத் தெளிவான மொழியில் பிரதமா் நரேந்திர மோடி எடுத்துரைத்துள்ளதாக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா்.
இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:
பாகிஸ்தானின் கொடூரமான பயங்கரவாதச் செயல்களுக்காக, அவா்களின் கற்பனைக்கு எட்டாத வகையிலான தண்டனையை பிரதமா் நரேந்திர மோடி வழங்கியுள்ளாா். பாரதத்தின் புதிய இயல்பை உலகுக்கு மிகத் தெளிவான மொழியில் அவா் எடுத்துரைத்துள்ளாா்.
அதேபோல், பாகிஸ்தானின் மோசமான அரசையும், அதன் அணு ஆயுத அச்சுறுத்தல் கேடயத்தையும் உடைத்தெறிந்த வகையில் வெளிப்படையாகத் தண்டிப்பதற்காகவும் பிரதமருக்கு நன்றி மற்றும் சல்யூட்.
இந்த புதிய போா் யுகத்தில் நமது மிக உயா்ந்த ராணுவ திறன்களைத் திறம்பட நிரூபித்ததற்காக நமது ஆயுதப் படைகளுக்குப் பாராட்டுகள். இதுவே புதிய பாரதம் மற்றும் அதன் புதிய இயல்பு என்று பதிவிட்டுள்ளாா்.