பாரதியார் சிலைக்கு முதல்வர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை
மகாகவி பாரதியாரின் 143 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, புதுச்சேரி ஆளுநர் மாளிகை அருகே உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு அரசு சார்பில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 143 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு,புதுச்சேரி ஆளுநர் மாளிகை அருகே உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு புதுச்சேரி அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதையும் படிக்க |2024 இல் இந்தியர்களால் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர் யார் தெரியுமா?
பாரதியாரின் திருவுருவச்சிலைக்கு அரசு சார்பில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன். முதல்வர் ரங்கசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுப்பணித் துறை அமைச்சர் லஷ்மிநாராயணன், விவசாயத் துறை அமைச்சர் தேனீ ஜெயகுமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் லஷ்மிகாந்தன். ரமேஷ் ஆகியோர் மற்றும் கலைஞர்கள் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பாரதியாரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.