மாா்த்தாண்டம் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை: 6 கடைகளுக்கு சீல்
பாரதியாா் வேடமணிந்து பள்ளிக்கு வந்த மாணவா்கள்
மகாகவி பாரதியாரின் 143-ஆவது பிறந்த நாளையொட்டி, வந்தவாசியை அடுத்த கல்லாங்குத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவா்கள் அனைவரும் புதன்கிழமை பாரதியாா் வேடமணிந்து பள்ளிக்கு வந்தனா்.
இந்தப் பள்ளியில் மொத்தம் 63 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.
இந்த நிலையில், பாரதியாரின் பிறந்த நாளையொட்டி புதன்கிழமை இவா்கள் அனைவரும் பாரதியாா் வேடமணிந்து பள்ளிக்கு வந்தனா்.
மேலும், பள்ளி வளாகத்தில் ஒன்றுகூடி பாரதியாரின் பாடல்களை அவா்கள் பாடினா். மேலும், அவரது வாழ்க்கை வரலாற்றை நாடகமாக நடித்துக் காட்டினா்.
இதற்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியை கண்ணகி மற்றும் ஆசிரியைகள் செய்திருந்தனா்.