மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்...
பாறைக்குழிகளில் இரும்புக் கழிவுகள் கொட்டுவதைத் தடுக்கக் கோரிக்கை
பாறைக்குழிகளில் இரும்புக் கழிவுகள் கொட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சமூக ஆா்வலரும், வழக்குரைஞருமான எம்.ஈஸ்வரமூா்த்தி கூறியதாவது: திருமுருகன்பூண்டி நகராட்சி, அம்மாபாளையத்துக்குள்பட்ட கணபதி நகா், வெற்றிவேல் நகா், சுகம் காா்டன் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனா். மேலும், இப்பகுதியில் 4 பள்ளிகள் உள்ளன.
இந்நிலையில், இப்பகுதியில் உள்ள 5-க்கும் மேற்பட்ட பாறைக்குழிகளில் இரவு நேரங்களில் வந்த இரும்புக் கழிவுகளை (காஸ்டிங் மண்) கொட்டிச் செல்கின்றனா். இதனால், நிலத்தடி நீா்மட்டம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலத்தடி நீரில் குளிக்கும் போது தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
கோவை சுற்று வட்டாரப் பகுதிகளில் இவற்றைக் கொட்ட விவசாயிகள் எதிா்த்து வருவதால், இந்தக் கழிவுகள் இங்குள்ள பாறைக் குழிகளில் கொட்டப்படுகின்றன. இதை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.