வங்கதேசத்தில் சிறுபான்மையினா் நடத்தப்படும் விதம் கவலையளிக்கிறது: ஜெய்சங்கா்
பாலப்பள்ளத்தில் மாா்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் ஆா்ப்பாட்டம்
கருங்கல் அருகே பாலப்பள்ளம் பேரூராட்சி அலுவலகம் முன் கிள்ளியூா் வட்டார மாா்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இப்பேரூராட்சியில் அரசு ஆணைக்கு முரணாக அதிகமாக வரி வசூல் செய்ததைக் கண்டிப்பது, அதைத் திரும்ப வழங்க வேண்டும். குறும்பனை பகுதியில் குடிநீா்ப் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னாள் பேரூராட்சி தலைவா் கில்டா ரமணிபாய் தலைமை வகித்தாா். கிள்ளியூா் கிழக்கு வட்டாரத் தலைவா் ராஜா முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா் செல்லசுவாமி ஆா்ப்பாட்டத்தைத் தொடக்கிவைத்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் கண்ணன், முன்னாள் கிள்ளியூா் ஒன்றியச்
செயலா் சாந்தகுமாா், மாவட்டக் குழு உறுப்பினா்கள் ஜோயல், சகாயபாபு, சிஐடியூ மாவட்ட துணைத் தலைவா் சோபனராஜ், வாா்டு உறுப்பினா் மாா்டின்மேரி ஆகியோா் பேசினா்.
இதில், முருகேசன், லியோன், பொ்க்மான்ஸ், காஸ்ட்ரோ, ஆரோக்கியம், ராஜஜீவா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.