செய்திகள் :

`பால் பவுடருக்கு பதில் க்யூப்' - ஜப்பானில் அறிமுகமான 'பேபி ஃபார்முலா க்யூப்ஸ்' - என்ன சிறப்பு?

post image

வித்தியாசமான கண்டுபிடிப்புகளுக்குப் பெயர்போன ஜப்பான், புதிய 'கியூப்' வடிவ பாலை அறிமுகப்படுத்தியுள்ளது.​ இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பொதுவாக, பச்சிளங் குழந்தைகளுக்குத் தாய்ப்பாலுக்கு மாற்றாக 'ஃபார்முலா மில்க்' பவுடர் வடிவத்தில் கொடுக்கப்படும்.

இதைப் பயன்படுத்துவது சில நேரங்களில் சவாலான விஷயமாக இருக்கும். குறிப்பாக நள்ளிரவு 2 மணி அல்லது 3 மணிக்குக் குழந்தை பசியால் அழும்போது, தூக்க கலக்கத்தில் இருக்கும் பெற்றோர்கள் சரியான அளவில் பவுடரை அளந்து, வெதுவெதுப்பான நீரில் கலக்குவது சிரமமாக இருக்கும். பல நேரங்களில் பவுடர் கீழே சிந்திவிடும் அல்லது அளவுகள் மாறிவிடும்.​

இதனால் ஜப்பானைச் சேர்ந்த பிரபல நிறுவனமான 'மெய்தி' (Meiji), பவுடருக்குப் பதிலாகத் திட வடிவிலான 'கியூப்'களை உருவாக்கியுள்ளது.

பார்ப்பதற்குச் சர்க்கரைத் துண்டுகள் போலவே இருக்கும் இவை, தண்ணீரில் போட்டவுடன் உடனடியாகக் கரைந்துவிடும் தன்மையுடையவையாக உள்ளது.

milk representative image

இது எப்படி வேலை செய்கிறது?

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவின்படி, ஒருவர் இந்த கியூப்களை எப்படிப் பயன்படுத்துவது என்று விளக்குகிறார்.  ஒரு கியூப் என்பது 40 மி.லி பாலுக்குச் சமம். அதாவது ஒரு கியூபை பாட்டிலில் போட்டு, தேவையான அளவு வெதுவெதுப்பான நீரை ஊற்றி ஆட்டினால் போதும், பால் தயாராகிவிடும்.

ஸ்பூன் கணக்கு, சிந்தும் கவலை, அளவு போன்ற எந்தப் பிரச்னையும் இதில் இல்லை என்று அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ரூ.1 கோடி பார்க்கிங் கட்டணம் செலுத்திய ஏர் இந்தியா விமானம் -காரணம் என்ன?

பராமரிப்புப் பணிக்காக கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 737-200 ரக விமானம், கவனக்குறைவால் அங்கேயே 13 ஆண்டுகள் கைவிடப்பட்டதால் தற்போது அதற்கு ரூ.1 கோட... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: பாபர் மசூதி கட்ட மம்தா கட்சி எம்.எம்.ஏ பூமி பூஜை; ராமர் கோயில் கட்ட பாஜக பூமி பூஜை

மேற்கு வங்க மாநில திரிணாமுல் காங்கிரஸ் எம்.எம்.ஏ. ஹிமாயூன் கபீர் முர்ஜிதாபாத்தில் பாபர் மசூதியை கட்டுவோம் என்று ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து அவரை மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தனது கட்சிய... மேலும் பார்க்க

ரெஸ்டாரண்ட் கேஸ் கவுண்டரில் நாய்; `வாடிக்கையாளர்களை அதுக்கு நல்ல தெரியும்' - வைரலான நாயின் கதை

மும்பையின் தென்பகுதியில் இருக்கும் போர்ட் பகுதியில் பிரிட்டானியா அண்ட் கோ என்ற இரானி ரெஸ்டாரண்ட் செயல்பட்டு வருகிறது. இந்த ரெஸ்டாரண்ட் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரெஸ்டாரண்டில் அங்கு... மேலும் பார்க்க

உங்க வீட்ல சின்னப் பிள்ளைகள் இருக்காங்களா? அப்போ இத படிங்க!

நெல்லையில், ரிவர்ஸ் எடுக்கப்பட்ட கார் மோதி 5 வயது பெண் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம், செய்தியை பார்த்தவர்களுக்கும், வாசித்தவர்களுக்கும் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியிருக... மேலும் பார்க்க

Latvia: `ஆண்கள் தட்டுப்பாடு' - துணையை தேடி வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் பெண்கள்

இந்தியாவில் வடமாநிலங்களில் ஆண்–பெண் விகிதச்சாரம் வெகுவாக மாறுபட்டு காணப்படுகிறது. இந்தியாவின் சில இடங்களில் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் ஆண்கள் திண்டாடிக்கொண்டும் இருக்கின்றனர். ஆனால் ஐரோப்பாவில் உ... மேலும் பார்க்க