பாளை.யில் பாலப்பணிகள்: நாளை முதல் போக்குவரத்து மாற்றம்
பாளையங்கோட்டையில் 6 இடங்களில் சிறுபாலம் கட்டும் பணி நடைபெற உள்ளதால் சனிக்கிழமை (மாா்ச் 1) முதல் போக்குவரத்து மாற்றப்பட உள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகர காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: பாளையங்கோட்டை முருகன்குறிச்சி சந்திப்பு முதல் மாா்க்கெட் வரையும், சமாதானபுரம் முதல் நீதிமன்றம் வரையிலான பகுதிகளில் 6 இடங்களில் சிறுபாலங்கள் கட்டும் பணி நடைபெற உள்ளது. இதனால் மாா்ச் 1 முதல் 20 ஆம் தேதி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.
அதன்படி, திருநெல்வேலி கேடிசிநகா், சீனிவாசநகா் வழியாக சமாதானபுரம், பாளை. பேருந்து நிலையம் செல்லும் வாகனங்கள் சீனிவாசநகரில் இருந்து அரசு சிறப்பு மருத்துவமனை, மேட்டுத்திடல் ரவுண்டானா வழியாக பாளை பேருந்து நிலையம் செல்ல வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.