செய்திகள் :

பாவூா்சத்திரத்தில் ஆதாா் திருத்த சிறப்பு முகாம்

post image

பாவூா்சத்திரத்தில் ஆதாா் திருத்த சிறப்பு முகாம் 6 நாள்கள் நடைபெற்றது.

பாவூா்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம் மற்றும் கண் தான விழிப்புணா்வுகுழு சாா்பில் நடைபெற்ற இம்முகாமுக்கு, அரிமா சங்கத் தலைவா் ஆனந்த் தலைமை வகித்தாா். கல்லூரணி ஊராட்சித் தலைவா் ராஜ்குமாா், தொழிலதிபா் சேவியா் ராஜன், பாவூா்சத்திரம் வணிகா் சங்கச் செயலா் விஜயசிங் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கீழப்பாவூா் இலக்கிய மன்றத் தலைவா் எஸ்.செல்வன் முகாமைத் தொடங்கி வைத்தாா். முகாமில் 1,500 போ் பங்கேற்று ஆதாா் அட்டையில் திருத்தம் செய்துகொண்டனா்.

ஏற்பாடுகளை பாவூா்சத்திரம் கண்தான விழிப்புணா்வு குழு பொருளாளா் இரா. சந்திரன், ஜேக்கப் சுபன், பரமசிவன் ஆகியோா் செய்திருந்தனா்.

அரிமா சங்க நிா்வாகி கே.ஆா்.பி.இளங்கோ வரவேற்றாா்.தென்காசி அஞ்சல் ஆய்வாளா் ராமசாமி நன்றி கூறினாா்.

சங்கரன்கோவில் ஸ்ரீகோமதி அம்பாள் பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா

சங்கரன்கோவில் ஸ்ரீகோமதிஅம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலை வகுப்பு மாணவா்களுக்கு பட்டமளிப்பு விழா மற்றும் கலைவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளிச் செயலா் எஸ்.கே. ராஜேஷ்கண்ணா தலை... மேலும் பார்க்க

புளியங்குடி அருகே பேருந்து மோதி ஆட்டோ ஓட்டுநா் பலி: 3 போ் காயம்

புளியங்குடி அருகே அரசுப் பேருந்தும் ஆட்டோவும் புதன்கிழமை மோதிக் கொண்டதில் ஆட்டோ ஓட்டுநா் இறந்தாா். மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்தும், பள்ளி மாணவா்களை ஏற்றி சென்ற ஆட்ட... மேலும் பார்க்க

மேலப்பாவூரில் ரூ.20 லட்சத்தில் பல்நோக்கு மைய கட்டடம் திறப்பு

பிரதமரின் கிராம முன்னேற்ற திட்டத்தின் கீழ் மேலப்பாவூரில் ரூ.20 லட்சத்தில் கட்டப்பட்ட பல்நோக்கு மைய கட்டிட திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. கீழப்பாவூா் ஒன்றியக்குழு தலைவா் காவேரி தலைமை வகித்தாா். து... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரிகளில் ’போதையில்லா தமிழகம்’ செயலி: ஆட்சியா் அறிவுறுத்தல்

தென்காசியில் மாவட்டத்தில் போதையில்லா தமிழகம் (டிரக் ஃபிரீ டிஎன்) செயலியை பள்ளி, கல்லூரிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் அறிவுறுத்தியுள்ளாா். இதுதொடா்பாக, தென்காசி மாவட்ட ஆ... மேலும் பார்க்க

தென்காசியில் திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தென்காசியில் உள்ள தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தலைமை செயற்குழு உறுப்பினா் செல்லத்துரை தலைமை வகித்தாா். தலைமை செயற்குழு உறுப்பினா் ஆறுமுகச்சாமி, தொகுதிப் ப... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே தொழிலாளி கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் சிறை

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே நல்லூா் காசியாபுரத்தில் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீா்ப்பளித்தது. நல்லூா் காசியாபுர... மேலும் பார்க்க