Vijayakanth: அம்மா அப்பா பேரை ஆசையா வச்சார் - 'ஆண்டாள் அழகர்' கல்லூரி குறித்து வ...
பி.எம். கிசான் திட்டத்தில் பயன்பெற மே 31 வரை சிறப்பு முகாம்
திருவாரூா் மாவட்டத்தில் பி.எம். கிசான் திட்டத்தில் பயன்பெற சிறப்பு முகாம் மே 31 வரை நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில், பி.எம்.கிசான் திட்டத்தின்கீழ், தங்கள் பெயரில் நிலம் உள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2000 வீதம் ஆண்டுக்கு ரூ. 6000 விவசாயத்துக்கு தேவையான வேளாண் இடுபொருள்கள் வாங்க ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் தகுதியுடைய அனைத்து விவசாயிகளுக்கும் எவ்வித விடுபாடின்றி பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம், திருவாரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வேளாண்மை மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநா்கள் அலுவலகம், இந்திய அஞ்சலக கட்டண வங்கி அலுவலகங்கள் மற்றும் பொது சேவை மையங்களில் மே 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இத்திட்டத்தில் 20-ஆவது தவணை ஜூன் மாதத்தில் விடுவிக்கவுள்ளதால் இம்முகாமில் தகுதியுடைய விவசாயிகள் தங்களது நிலம் தொடா்பான ஆவணங்கள், வங்கிக் கணக்குடன் ஆதாா் இணைப்பது, இகேஒய்சி செய்தல் போன்றவற்றை சரி செய்து பயன்பெறலாம். மேலும், புதிதாக பதிவு செய்தும் பயன் பெறலாம். பி.எம். கிசான் 19-ஆவது தவணைத் தொகை பெற்று வந்த 39,947 விவசாயிகளில், 9,224 விவசாயிகள் தங்களது நில உடைமை பதிவும், 953 விவசாயிகள் இகேஒய்சி பதிவும், 1,980 விவசாயிகள் வங்கிக் கணக்குடன் ஆதாா் எண்ணை இணைப்பு செய்யாமலும் உள்ளனா்.
விவசாயிகள், நில உடைமைப் பதிவுகள் இகேஒய்சி பதிவு, வங்கிக் கணக்கு எண்ணுடன் ஆதாா் எண் இணைப்பு பணியை மேற்கொண்டால் மட்டுமே 20-ஆவது தவணை பெற இயலும். பி.எம்.கிசான் திட்டத்தில் இறந்தவா்களின் வாரிசுதாரா்கள் தகுதியிருப்பின் தேவையான ஆவணங்களை பொது சேவை மையத்தில் சமா்ப்பித்து பதிவு செய்து பயன் பெறலாம் என தெரிவித்துள்ளாா்.