செய்திகள் :

பிக் பாஸ் வீட்டில் முதல்முறையாக அழுத தீபக்!

post image

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் நடிகர் தீபக், தனது தவறை உணர்ந்து முதல்முறையாக கண்ணீர் விட்டு அழுதார்.

அருண் பிரசாத் முன்பு தீபக் அழுத விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 10 வாரத்தை எட்டியுள்ளது. இதில் 65வது நாள் போட்டியின்போது காலையிலேயே அருண் பிரசாத்துக்கும் சமையல் செய்யும் அணியில் இருப்பவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தொழிலாளர் அணியில் இருக்கும் அருண் பிரசாத் காலையில் பிக் பாஸ் வீட்டிற்கு வந்து தேநீர் கேட்கிறார். அப்போது கேலியாக பேசிய தீபக், வேலையாள்களுக்கு இவ்வளவுதான் தேநீர் கொடுப்போம் எனக் கூறுகிறார்.

ஆனால், இதனால் ஆத்திரமடைந்த அருண் பிரசாத், தொழிலாளி என என்னை மட்டம்தட்ட வேண்டாம், நானும் பிக் பாஸ் வீட்டில்தான் உள்ளேன். இந்த வீடு எனக்கும் சொந்தமானதுதான். பிக் பாஸ் வீட்டில் எனக்கும் உரிமை உள்ளது எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.

இதற்கு பதிலளித்து பேசிய தீபக், பணியின் அடிப்படையில் மட்டுமேதான், தான் அப்படி கூறியதாகவும், அவரை மட்டம் தட்டுவதற்காக கூறவில்லை எனவும் விளக்கமளிக்கிறார். தீபக்கிற்கு ஆதரவாக பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் பேசுகின்றனர்.

தொழிலாளிக்கு இவ்வளவுதான் தேநீர் கொடுப்போம் என தீபக் கூறுவதை ஏன் இந்த வீட்டில் உள்ளவர்கள் தவறு என உணரவில்லை எனக் கூறி வீட்டில் இருந்து வெளியேறுகிறார்.

பின்னர் தான் கேலியாகக் கூறியதை சீரியஸாக எடுத்துக்கொண்டு கோபமடைந்த அருண் பிரசாத்திடம் தீபக் மன்னிப்பு கோருகிறார். நீ என் சகோதரன் போன்றவன் என்ற உரிமையில்தான் தான் அப்படி கூறியதாகவும், வேறு யாரேனும் இருந்திருந்தால் அவ்வாறு பேசியிருக்க மாட்டேன் எனவும் கூறுகிறார். நீ இவ்வளவு பாதிக்கப்படுவாய் என நான் நினைக்கவில்லை என வருந்துகிறார்.

அப்போது ஒருகட்டத்துக்கு மேல், தீபக் கண்ணீர் விட்டு அழுது மன்னிப்பு கேட்கிறார். அதுவரை தீபக் மீது கடும் கோபத்தில் இருந்த அருண் பிரசாத், அழும்போது அவரைக் கட்டியணைத்து ஆறுதல் கூறுகிறார். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

அருண் பிரசாத் எதற்கெடுத்தாலும் கோபப்பட்டு வார்த்தைகளை விடுவதாகவும், அவர் தன்னை உணர வேண்டும் எனவும் தீபக்கிற்கு ஆதரவாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

பிக் பாஸ் 8: அருணுக்கு ஆதரவாக களமிறங்கிய செளந்தர்யா!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இதுவரை இல்லாத வகையில் அருண் பிரசாத்துக்கு நடிகை செளந்தர்யா ஆதரவு தெரிவித்துள்ளார்.பிக் பாஸ் வீட்டில் அருணின் செயல்களை செளந்தர்யாவும், செளந்தர்யாவின் செயல்களை அருண் பிரச... மேலும் பார்க்க

ஏ. ஆர். ரஹ்மான், அனிருத் வரிசையில் சாய் அபயங்கர்?

சாய் அபயங்கர் அடுத்த தலைமுறை இசையமைப்பாளராக உருவெடுத்து வருகிறார்.தமிழ் சினிமாவில் தலைமுறை இடைவெளிகளில் இளையராஜா, ஏ. ஆர். ரஹ்மான், அனிருத் என இம்மூவரும் தங்களுக்கான இடங்களைப் பிடித்தவர்கள். இதில், இளை... மேலும் பார்க்க

பிக் பாஸ் விளையாட்டைக் கெடுப்பவர் முத்துக்குமரன்!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் விளையாட்டைக் கெடுக்கும் வகையிலான வேலைகளில் முத்துக்குமரன் ஈடுபடுவதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் 10வது வாரத்தில் தொழிலாளர... மேலும் பார்க்க

பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமிதா பைஜூ!

நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிய பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே மூலம் முன்னணி நாயகனாகவும் கவனம் ஈர்த்துள்... மேலும் பார்க்க

மெஸ்ஸிக்கு அடுத்து எம்பாப்பே புதிய சாதனை..! ரியல் மாட்ரிட் வெற்றி!

சாம்பியன் லீக் கால்பந்து தொடரில் ரியல் மாட்ரிட் அணி வீரர் கிளியன் எம்பாப்பே 50 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். சாம்பியன் லீக்கில் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடிவரும் கிளியன் எம்பாப்பே சில மாதங்... மேலும் பார்க்க

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த கோல்டன் ஸ்பேரோ!

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் பாடல் யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். இதில், தனுஷ் சகோதரியின் மகன் ந... மேலும் பார்க்க