செய்திகள் :

``பிப்ரவரி மாதம் பங்கு சந்தைக்கு பெரும் ஆபத்து.." - எச்சரிக்கும் Rich Dad, Poor Dad புத்தக ஆசிரியர்!

post image

Rich Dad, Poor Dad புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி அவ்வப்போது பொருளாதாரச் சரிவுகள் குறித்து எச்சரித்து வருவார். அந்த வகையில், இந்த ஆண்டு, பிப்ரவரி மாதம் பங்குச் சந்தை மிகப்பெரும் சரிவைச் சந்திக்கும் ஆபத்து இருக்கிறது என எச்சரித்திருக்கிறார். இந்த சரிவு, கார், வீடு உள்ளிட்ட முக்கியப் பங்குகளின் பத்திரங்களின் விற்பனையை அதிகரிக்கும். எனவே, முதலீடு செய்பவர்கள், பிட்காயின், தங்கம், வெள்ளியில் முதலீடு செய்யலாம் என்ற ஆலோசனையையும் வழங்கியிருக்கிறார்.

ராபர்ட் கியோசாகி

கடந்த காலங்களிலும் அவர் இது போன்ற எச்சரிக்கைகளை வெளியிட்டிருக்கிறார். ஆனால், அதில் பெரும்பாலான கணிப்புகள் தவறானவை என நிரூபிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு ஏப்ரலில், ``அமெரிக்காவின் வானளாவிய கடனால் அமெரிக்க அரசு திவாலாகிவிடும். ஒவ்வொரு 3 மாதத்துக்கும் 1 ட்ரில்லியன் டாலர் இழப்பு ஏற்படும். எனவே, தங்கம், வெள்ளி, பிட்காயின் போன்றவற்றில் முதலீடு செய்யவும்" என்றார். ``2023-ம் ஆண்டு அமெரிக்கா அரசின் பொருளாதார மந்த நிலை ஏற்படும்.

அதனால் தங்கம், வெள்ளி, பிட்காயின் பங்குகள் கடுமையான விலை உயர்வில் இருக்கும். இந்த விலை உயர்வுகள், அமெரிக்க டாலரின் மீதான நம்பிக்கை சரிவால் ஏற்படும்" என்றார். 2022-ம் ஆண்டில், பங்குகள், பத்திரங்கள், ரியல் எஸ்டேட், தங்கம், பிட்காயின் கூட குறிப்பிடத்தக்க சரிவை சந்திக்கும் என்றார். இவர் கணித்த அனைத்தும் நடக்கவில்லை என்றாலும், ரியல் எஸ்டேட் வீழ்ச்சி, பங்கு சந்தை வீழ்ச்சி போன்ற சில கணிப்புகள் மட்டும் நடந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Budget 2025 வேலை வாய்ப்பை உருவாக்காது -CPM Kanagaraj | Nirmala Sitharaman

பட்ஜெட் 2025 ஒரு சிறிய எண்ணிக்கையிலானவர்களுக்கு மட்டுமே பயனளிக்கிறது. ஆனால், வேலை வாய்ப்பை உருவாக்கவில்லை என கூறுகிறார் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ். மேலும் பார்க்க

Union Budget 2025 : EV கார், பைக், லெதர், மொபைல்... விலை குறையும், உயரும் பொருள்கள் என்னென்ன?!

2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். வரிச்சலுகை விரிவுபடுத்தப்பட்டதன் மூலம், இந்த பட்ஜெட் இந்தியாவின் வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தினருக்கா... மேலும் பார்க்க

Budget 2025 : "இந்திய பட்ஜெட்டா, பீகார் பட்ஜெட்டா?" - காங்கிரஸ் கேள்வி!

பட்ஜெட் 2025-26 தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வரிச்சலுகை வரம்பு அதிகரிப்பு உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் கூறப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் ரியாக்ஷன் என்ன என்பதைப் பார்க்கலாம். பழைய திட்டங்களின் நில... மேலும் பார்க்க

Budget 2025: 'தாமரை விதை சாகுபடி, ஐஐடி விரிவாக்கம்..' - பீகாருக்கு அறிவிக்கப்பட்ட 5 திட்டங்கள் என்ன?

இந்த ஆண்டு நவம்பர் மாதம் பீகாரில் தேர்தல்கள் வர இருக்கும் நிலையில்,பட்ஜெட்டில்பீகாருக்குப் பல திட்டங்கள் அள்ளிக்கொடுக்கப்பட்டுள்ளன.இன்று நிர்மலா சீதாராமன் பீகாரின் பாரம்பரிய கலையான மதுபானி கலை பொறிக்க... மேலும் பார்க்க

Budget 2025: "AI -க்கு பலியாகும் வேலைகள்" - பொருளாதார அறிக்கை சொல்வதென்ன?

இந்தியா, முழுவதுமாக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் இயைந்து செயல்பட தயராகவில்லை என்றாலும், நம் நாட்டின் தொழிலாளர் சந்தையில் ஏ.ஐ வளர்ச்சியால் ஏற்படப்போகும் இடையூறுகள் குறித்து அரசின் பொருளாதார க... மேலும் பார்க்க