CAG Report: தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் உயர்வு... எவ்வளவு தெரியுமா?!
பிரண்டன் கிங் அதிரடி: தொடரை வென்றது மேற்கிந்திய தீவுகள்!
வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது மேற்கிந்திய தீவுகள் அணி.
மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதற்கு முன்னதாக நடைபெற்ற டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமன் ஆன நிலையில், முதலாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி எளிதல் வெற்றிபெற்றது.
இதையும் படியுங்கள்| தொலைக்காட்சி பார்த்து கிரிக்கெட் கற்றுக்கொண்டேன்: பும்ரா!
அதன்தொடர்ச்சியாக, கிழக்கு நெப்ராஸ்காவில் உள்ள வெர்னர் பார்க்கில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் கேப்டன் ஷாய் ஹோப் முதலில் வங்கதேச அணியை பேட்டிங் செய்ய பணித்தார்.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல், 45.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 227 ரன்கள் எடுத்தது.
இதையும் படியுங்கள்|ஓவியர், பாடகர், எழுத்தாளர்..! சச்சினின் தூக்கத்தை கெடுத்த பௌலரின் புதிய பரிணாமம்..!
அதிகபட்சமாக மஹ்மத்துல்லா 62 ரன்கள் (4 சிக்ஸர், 2 பவுண்டரி) விளாசினார். 8 வரிசையில் களமிறங்கிய தன்சின் ஹசன் 45 ரன்களும்(2 சிக்ஸர், 4 பவுண்டரி), தன்ஷித் ஹசன் 46 ரன்களும் (4 சிக்ஸர், 2 பவுண்டரி) விளாசினர். மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில், ஜெய்டன் சேல்ஸ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
அடுத்து 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 36.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
இதையும் படியுங்கள்|ஒருவரையொருவர் மாறிமாறி புகழ்ந்துகொண்ட ஜோ ரூட், ஹாரி புரூக்!
அதிரடியாக விளையாடிய பிரண்டன் கிங் 82 ரன்களும் (3 சிக்ஸர், 8 பவுண்டரி), எவின் லீவிஸ் 49 ரன்களும் (4 சிக்ஸர், 2 பவுண்டரி), கேஸீ கார்ட்டி 45 ரன்களும் 7 பவுண்டரி) எடுத்தனர். வங்கதேச அணித் தரப்பில் நிஹித் ரானா, ரிஷாத் ஹொசைன், ஆஃபிஃப் ஹொசைன் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
4 விக்கெட்டுகள் வீழ்த்திய ஜெய்டன் சேல்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.