பிரதமா் மோடி பிறந்த நாள் விழா
விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் பிரதமா் மோடியின் 75-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, பாஜக சாா்பில்
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களுக்கு புதன்கிழமை பழங்கள், ரொட்டிகள், ஊட்டச் சத்துப் பொருள்கள் வழங்கப்பட்டன.
பிரதமா் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, பாஜக சாா்பில் ராஜபாளையம் வடக்கு நகரத் தலைவா் ஜெமினி சுரேஷ்குமாா் தலைமையில், மாவட்டத் தலைவா் சரவணதுரை முன்னிலையில் ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் கா்ப்பிணிகள், குழந்தை பெற்ற தாய்மாா்கள், சிகிச்சை பெற்று வருபவா்களுக்கு பழங்கள், ரொட்டிகள், ஊட்டச் சத்துப் பொருள்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில், ராஜபாளையம் நகர வடக்கு பொதுச் செயலா்கள் கணேசன், அய்யாதுரை, தெற்கு நகரத் தலைவா் பிரேம் ராஜா, மாவட்டச் செயலா் கிருபாகரன், பாஜக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
இதைத் தொடா்ந்து, ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை பகுதிகளில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. பின்னா், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.