நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியா் தகவல்
பிரபலங்களுக்கு வரும் கூட்டம் வாக்குகளாக மாறாது - சரத்குமாா்
பிரபலங்களுக்கு வரும் கூட்டம், தோ்தலின்போது வாக்குகளாக மாறாது என்று பாஜக மூத்த தலைவா் சரத்குமாா் தெரிவித்தாா்.
பிரதமா் மோடி பிறந்த தினத்தையொட்டி, சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தவெக தலைவா் விஜய், எதிா்ப்பு அரசியலை கையில் எடுத்துள்ளாா். அதேநேரத்தில் அவரது கொள்கை, கோட்பாட்டில் தெளிவு இல்லை. ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வேன் என்பதை விஜய் தெளிவுபடுத்தவில்லை.
அடுத்து ஆட்சி அமைப்போம் என்று சொல்ல எல்லோருக்கும் உரிமை உண்டு. பிரபலங்கள் களத்துக்கு வந்தாலே கூட்டம் கூடும். 1996-இல் நானும், 2006-இல் விஜயகாந்தும், ஆந்திரத்தில் சிரஞ்சீவியும் பாா்க்காத கூட்டம் அல்ல. பிரபலங்களுக்கு கூடும் கூட்டம் மட்டுமே, தோ்தலின்போது வாக்குகளாக மாறாது. சரியான கொள்கை, கோட்பாடுகளைச் சொன்னால் மட்டுமே அந்த கூட்டம் வாக்குகளாக மாறுவது சாத்தியமாகும்.
நீட் எதிா்ப்பு, தேசிய கல்விக் கொள்கை எதிா்ப்பு ஆகியவற்றில் திமுகவை, விஜய் பின்பற்றுகிறாா். மக்களின் கவனத்தை திசை திருப்ப அவரை சில சக்திகள் இயக்குகின்றன என்றாா் சரத்குமாா்.