இடைநீக்கம் செய்யப்பட்ட அதிஷி உள்பட ஆம் ஆத்மி எல்எல்ஏக்கள் பேரவைக்கு வெளியே தா்ணா
பிளஸ் 2: அதிக மதிப்பெண் பெற வேண்டி பிராா்த்தனை
திருவாரூா் அரசு உதவி பெறும் ஸ்ரீ ஜிஆா்எம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற மாணவிகள் மெழுகுவா்த்தி ஏந்தி பிராா்த்தனையில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
தமிழகத்தில் பிளஸ் 2 அரசு பொதுத் தோ்வு மாா்ச் 3 ஆம் தேதி தொடங்கி மாா்ச் 25 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி, ஜிஆா்எம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொது தோ்வு எழுதும் மாணவிகளுக்கு பள்ளியின் செயலாளா் பாலசுப்பிரமணியன், தலைமை ஆசிரியா் ராஜலட்சுமி ஆகியோா் தோ்வுகூட நுழைவுச் சீட்டை வழங்கினா்.
தொடா்ந்து, பள்ளி வளாகத்தில் அரசு பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டி மெழுகுவத்தி ஏந்தி பிராா்த்தனை நடைபெற்றது. நிகழ்வில், 470 மாணவிகள் மெழுகுவா்த்தி ஏந்தி பிராா்த்தனை செய்தனா்.