சேலம் தி ஃபுட் ஸ்ட்ரீட்: 35 கடைகளுடன் கோடிக்கணக்கில் அமைந்த புதிய டைம் பாஸ் ஸ்பா...
பீகார்: ``2020-ல் நடந்த தவறு மீண்டும் நடந்தால்'' - தேர்தல் அதிகாரிகளை சாடிய தேஜஸ்வி யாதவ்
பீகார் தேர்தலில் மகாபந்தன் கூட்டணி தோல்வியடையும் என கருத்துக் கணிப்புகள் கணிப்புகள் கூறியபோது கடுமையாக மறுத்துவந்தார். வாக்கு எண்ணிக்கையில் இன்று (நவ. 14) காலை முதலே என்.டி.ஏ கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. எனினும் நிலைமை மாறக்கூடும் என நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர் ஆர்.ஜே.டி கட்சியினர்.
வாக்குப் பதிவு தொடங்கியபிறகும் "மாநிலத்தில் வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்த நாங்கள் அரசமைக்கப் போகிறோம்" எனப் பேசியிருக்கிறார் தேஜஸ்வி யாதவ்.

நேற்றையதினம் செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ், வாக்கு எண்ணிக்கையின் போது எந்தவிதமான முறைகேடுகளும் நடக்கக்கூடாது என்று அரசு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
2020ம் ஆண்டு மகாபந்தன் கூட்டணி ஆட்சியமைக்கத் தயாரானதாகவும், நேர்மையற்ற அதிகாரிகளின் சூழ்ச்சியால் என்.டி.ஏ கூட்டணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதாகவும் கூறிய அவர், தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கையில் பாரபட்சம் பார்க்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
"நாங்கள் தெளிவான பெரும்பான்மையுடன் அரசாங்கத்தை அமைப்போம் என்று முழுமையாக நம்புகிறோம். நாளைக்கு நடைபெறும் வாக்குகள் எண்ணிக்கையில் நாங்கள் மிகவும் எளிதாக வெற்றி பெறுவோம் எங்கள் ஊழியர்கள் அனைத்து வாக்குகள் எண்ணும் நிலையங்களிலும் விழிப்புடன் உள்ளனர்.

நிர்வாகம் 2020 ஆம் ஆண்டு செய்த தவறை மீண்டும் செய்தால், அல்லது யாராவது தங்கள் வரம்பை மீறினால், அரசியலமைப்புக்கு விரோதமான மற்றும் நியாயமற்ற செயலில் ஈடுபட்டால், எந்த அதிகாரியாவது எவருடைய உத்தரவின் பேரில் செயல்பட்டால், பொதுமக்கள் அதைப் பார்த்துக் கொள்வார்கள்." எனப் பேசினார்.
மேலும் அவர், என்.டி.ஏ கூட்டணி கருத்துக் கணிப்புகள் மூலம் தேர்தலில் வெல்வதாக ஒரு பிம்பத்தை ஏற்படுத்துவதாகக் குற்றம்சாட்டினார். தனக்கு வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடக்கவிருப்பதாக தகவல் கிடைத்ததாகவும் தெரிவித்தார்.
Bihar Election Results
243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டமன்றத்தில் வெற்றிபெற 122 தொகுதிகள் அவசியம். காலை 11:40 நிலவரப்படி என்.டி.ஏ கூட்டணி 190க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மகாபந்தன் கூட்டணி 48+ இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.


















