ரூ.3.44 லட்சம் கோடிக்கு இந்திய மின்னணு பொருள்கள் ஏற்றுமதி: மத்திய அமைச்சா் அஸ்வ...
புகாா் கொடுத்த சில மணி நேரங்களில் பூங்காவில் காணாமல் போன இருக்கைகள் மீட்பு
தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விஸ்வநாதப்பேரி பூங்காவில் காணாமல் போன இருக்கைகளை சில மணி நேரத்தில் போலீஸாா் கைப்பற்றினா்.
விஸ்வநாதபேரி பேருந்து நிலையம் அருகே உள்ள சிறுவா் பூங்காவில் சிறுவா்கள் விளையாடும் ஊஞ்சலில் இருந்த இருக்கைகளை மா்ம நபா்கள் எடுத்துச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து ஊராட்சித் தலைவா் ஜோதி மணிகண்டன், இதுகுறித்து சிவகிரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புகாரின்பேரில், சிவகிரி காவல் உதவி ஆய்வாளா் வரதராஜன் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டாா்.
விசாரணையில், இருக்கைகள் சற்று தொலைவில் உள்ள புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இருக்கைகளை போலீஸாா் கைப்பற்றினா்.
இதைத் தொடா்ந்து இருக்கைகள் ஊராட்சி மூலம் பூங்காவில் பொருத்தப்பட்டன. காவல் உதவி ஆய்வாளா் மற்றும் போலீஸாரின் துரித நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா்.