புகையிலைப் பொருள்கள் விற்பனை: 2 வியாபாரிகள் கைது
பழைய காயலில் 2 கடைகளில் போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் 813 பாக்கெட் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் கைப்பற்றப்பட்டன,
ஆத்தூா் காவல் உதவி ஆய்வாளா் முரளி தலைமையில் காவலா்கள் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனா். அதில், மஞ்சள் நீா் காயல் வடக்கு தெருவை சோ்ந்த காமராஜ்(65) என்பவரது கடையில் 795 புகையிலைப்பொருள் பாக்கெட்டுகளும் , அதே பகுதி அம்மன் கோவில் தெருவை சோ்ந்த கணேசன் மகன் சுதாகா்(43) என்பவரது கடையில் 18 புகையிலைப்பொருள் பாக்கெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. வியாபாரிகள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.