மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்...
புகையிலைப் பொருள்கள் விற்ற பெண் கைது
கன்னியாகுமரி பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்றதாக பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கன்னியாகுமரி பகுதியில் சில கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், உதவி ஆய்வாளா் எட்வா்ட் பிரைட் தலைமையிலான போலீஸாா் சோதனை நடத்தினா். வடக்கு குண்டல் பகுதியில் சாந்தகுமாரி (56) என்பவரது கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, அப்பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.