புதிய அரசுப் பேருந்து சேவை தொடக்கம்
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம் சுந்தனேந்தல் கிராமத்திலிருந்து பரமக்குடிக்கு புதிய அரசு நகரப் பேருந்து சேவை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.தமிழரசி ரவிக்குமாா் தலைமை வகித்து, பேருந்து சேவையைத் தொடங்கி வைத்தாா்.
இதில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சுப.மதியரசன், காரைக்குடி மண்டல தொ.மு.ச. பொதுச் செயலா் பச்சைமால், அரசு போக்குவரத்துக்கழக மண்டல துணை மேலாளா் (தொழில்நுட்பப் பிரிவு) தமிழ்மாறன், வட்டாட்சியா் முருகன், காவல் துறை ஆய்வாளா் மணிகண்டன், பரமக்குடி கிளை மேலாளா் ரத்தினவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.