Steve Jobs: "அவர் விரும்பி படித்த இந்திய யோகியின் புத்தகம் இதுதான்" - நண்பர் பகி...
புதிய பாம்பன் பாலம்: பாதுகாப்பு ஆய்வுகள் மேற்கொள்ள 5 போ் கொண்ட குழு
பாம்பன் புதிய பாலத்தின் பாதுகாப்பு நிலை குறித்து ஆராய ஐந்து போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.
ரயில்வே துறையின் தென்மண்டல பாதுகாப்பு ஆணையா், புதிய பாம்பன் ரயில் பாலத்தை சமீபத்தில் ஆய்வு செய்ததில், பயணிகள் மற்றும் சரக்கு ரயில்கள் பயன்படுத்தத் தொடங்கும் முன் சரிசெய்ய வேண்டிய சில சிக்கல்கள் இருப்பதாகத் தெரிவித்தாா்.
இதுகுறித்து அஸ்வினி வைஷ்ணவ் தில்லியில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறுகையில், ‘ரயில்வே வாரியத்தின் கூடுதல் உறுப்பினா்கள் வழிகாட்டுதலின் கீழ், புதிய பாம்பன் பாலத்தின் பாதுகாப்பு நிலை குறித்து ஆய்வு செய்ய ஐந்து போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரநிலைகள் அமைப்பின் பாலம் கட்டுமான நிபுணா்கள் மற்றும் பாதுகாப்பு ஆலோசகா்கள் உள்ளனா்.
பாலத்தின் வடிவமைப்பில் உள்ள அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து ஒன்றரை மாதங்களுக்குள் பாதுகாப்பு பகுப்பாய்வை இந்தக் குழு மேற்கொள்ளும்’ என தெரிவித்தாா்.
நாட்டின் முதல் செங்குத்து-தூக்கு பாலமான இந்த 2.05 கி.மீ. பாம்பன் பாலத்தின் கட்டுமானப் பணி, கடந்த பிப்ரவரி, 2020-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
1913-ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழைய பாம்பன் ரயில் பாலம், பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதால் கடந்த 2022-ஆம் ஆண்டு அதன் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன.
1988-ஆம் ஆண்டு சாலைப் பாலம் கட்டப்படும் வரை, ராமேசுவரம் தீவில் இருந்து பிரதான நிலப்பரப்பை இணைக்கும் ஒரே இணைப்பாக இந்த ரயில் சேவை மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.