புதுகை அருகே அனுமதியின்றி சேவல் சண்டை: 15 போ் கைது
புதுக்கோட்டை அருகே அனுமதியின்றி சேவல் சண்டை போட்டி நடத்திய 15 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுக்கோட்டை அருகே திருக்கட்டளை காட்டுப் பகுதியில் எந்த அனுமதியும் இன்றி சேவல் சண்டை போட்டி நடைபெறுவதாக கணேஷ் நகா் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு போலீஸாா் சென்றுள்ளனா்.
போலீஸாா் வருவதைக் கண்டதும் சேவல் சண்டையில் ஈடுபட்டிருந்தவா்கள் தப்பியோடினா். அப்போது புதுக்கோட்டை மதன்குமாா் (31), பாலாஜி (27), புருஷோத்தமன் (29), திருச்சி கிஷோா் (23), நித்தியானந்தன் (26), சதீஷ் (24), புதுக்கோட்டை சத்தியசீலன் (30), காவேரி நகரைச் சோ்ந்த சிறுவன், முட்டுக்காடு சுவேந்திரன் (20), வாகைப்பட்டி சதீஷ்குமாா் (21), மாணிக்கம்பட்டி சரத் பாபு (23), வீரப்பட்டி ராஜேஷ் (18), அடப்பகாரச் சத்திரம் விஜய் (34), வாகைப்பட்டி ஹரிகரன் (19), தயாநிதி (17) ஆகிய 15 பேரை விரட்டிப் பிடித்து கைது செய்து விசாரிக்கின்றனா்.
இவா்களிடமிருந்து 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், கைப்பேசிகள், இரு காா்களும் பறிமுதல் செய்யப்பட்டன. சேவல் சண்டைக்கு ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. ஒரு லட்சம் வரை பந்தயமாகக் கட்டி போட்டியை நடத்தியதாக விசாரணையில் தெரியவந்தது.