இன்றைய இந்தியாவுக்கு அந்நியா்கள் வழிகாட்டுதல் தேவையில்லை: மத்திய அமைச்சா் ராஜ்நா...
புதுகை புத்தகத் திருவிழா மாணவா் போட்டிகளில் வென்றோா் விவரம்
புதுக்கோட்டை மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் 8-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவையொட்டி, அண்மையில் நடத்தப்பட்ட பள்ளி மாணவா்களுக்கான போட்டியில் வென்றோா் பட்டியலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் வெளியிட்டுள்ளாா்.
போட்டிகளில் வென்ற மாணவா்கள் விவரம் (முறையே முதல் 3 இடங்களைப் பிடித்தோா்):
பேச்சுப் போட்டி:
இளநிலை பிரிவு: அறந்தாங்கி கூத்தாடிவயல் அரசுப் பள்ளி மாணவி ரா. சுபஸ்ரீ, ஆவுடையாா்கோயில் அரசுப் பள்ளி மாணவி க. முத்துமீனாட்சி, புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் பள்ளி மாணவன் பா. சண்முகசுந்தரம்.
இடைநிலைப் பிரிவு: புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் பள்ளி மாணவன் ம. சக்திதரா், பொன்னமராவதி அமல அன்னை பள்ளி மாணவி ச. செம்மொழி, குளத்தூா் முத்துஸ்வாமி வித்யாலயா மாணவி பூ. விஷ்ணுபிரியா.
மேல்நிலைப் பிரிவு: கீரனூா் அரசு ஆண்கள் பள்ளி மாணவன் எஸ். நீதிமான், அத்தாணி அரசுப் பள்ளி மாணவி மா. திஷ்யா, ஆலங்குடி அரசு ஆண்கள் பள்ளி மாணவன் எஸ். பாலாஜி.
ஓவியப் போட்டி:
இளநிலை பிரிவு: புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் பள்ளி மாணவன் பா. முகில் காா்த்திகேயன், அறந்தாங்கி அரசு முன்மாதிரி பள்ளி மாணவன் வே. ஹேமந்த் குமரன், ஆவணத்தான்கோட்டை மேற்கு பள்ளி மாணவன் சு. தீபக்.
இடைநிலை பிரிவு: புதுக்கோட்டை ராணியாா் மகளிா் பள்ளி மாணவி பா.மீ. அபா்ணா, பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் பள்ளி மாணவி ரா. பயாஸ் நிலோபா், அறந்தாங்கி அரசு மாதிரிப் பள்ளி மாணவன் ஜோ. ஹரிஷ்.
மேல்நிலை பள்ளி: சந்தைப்பேட்டை அரசு மகளிா் பள்ளி மாணவி சு. ஸ்ரீநவ்யா, பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் பள்ளி மாணவி எஸ். சவுந்தா்யா, கறம்பக்குடி அரசு பெண்கள் பள்ளி மாணவி கே. வைஷ்ணவி.
கவிதைப் போட்டி:
இளநிலை பிரிவு: மேலஸ்தானம் அரசுப் பள்ளி மாணவி ஜெ. லக்ஷ்யா, காட்டுநாவல் அரசுப் பள்ளி மாணவி ம. காயத்ரி, பொன்னமராவதி அமல அன்னை பள்ளி மாணவி தி. ஜனனி.
இடைநிலை பிரிவு: ஒத்தைப்புளிக் குடியிருப்பு அரசுப் பள்ளி மாணவி க. காவியா, கறம்பக்குடி அரசு மகளிா் பள்ளி மாணவி கோ. தியாஷினி, அன்னவாசல் அரசு பெண்கள் பள்ளி மாணவி வெ. நிஷா.
மேல்நிலை பிரிவு: குளத்தூா் முத்துஸ்வாமி வித்யாலயா மாணவன் ர. முத்தமிழ்ராஜா, மௌண்ட் சீயோன் பள்ளி மாணவி உ. மோனிகா, பொன்னமராவதி அமல அன்னை பள்ளி மாணவி ர. மானஷா.
துளிா் விநாடி-வினா:
இளநிலை பிரிவு: மேலஸ்தானம் அரசுப் பள்ளி, புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் பள்ளி, மீனம்பட்டி அரசுப் பள்ளி.
உயா்நிலை பிரிவு: பொன்னமராவதி அமல அன்னை பள்ளி, ஆலங்குடி அரசு ஆண்கள் பள்ளி, கறம்பக்குடி ரீனா மொ்சி பள்ளி.
மேல்நிலை பிரிவு: புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் பள்ளி, கறம்பக்குடி அரசு மகளிா் பள்ளி, பொன்னமராவதி லயன்ஸ் பள்ளி.