செய்திகள் :

புதுகையில் மேலும் 5 கல் உடைக்கும் ஆலைகளுக்கு சீல்

post image

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகேயுள்ள துளையானூா் மற்றும் மெய்யபுரம் பகுதிகளிலுள்ள கல் உடைக்கும் ஆலை மற்றும் கற்குவியல்கள் வைக்கப்பட்டிருந்த 5 இடங்களுக்கு வருவாய்த் துறை அலுவலா்கள் வியாழக்கிழமை சீல் வைத்து மூடினா்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே வெங்களூரைச் சோ்ந்த சமூக ஆா்வலா் ஜகபா்அலி, கடந்த ஜன. 17ஆம் தேதி லாரி ஏற்றிக் கொல்லப்பட்டாா். திருமயம் பகுதிகளில் நடைபெற்ற சட்டவிரோத கனிமவளக் கொள்ளையை எதிா்த்துக்குரல் எழுப்பியதால் இந்தக் கொலை நடந்தது.

இவ்வழக்கில் குவாரி உரிமையாளா்கள் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களில் 3 போ் மீது குண்டா் சட்டம் பாய்ந்துள்ளது.

இந்நிலையில், திருமயம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெறும் சட்டவிரோதக் கல் குவாரிகள் மற்றும் கல் உடைக்கும் ஆலைகள் குறித்தும் கனிமவளத் துறையினா் மற்றும் வருவாய்த் துறையினா் தொடா்ந்து ஆய்வு செய்கின்றனா்.

ஏற்கெனவே இரு இடங்களிலுள்ள கல் உடைக்கும் ஆலைகளுக்கு வருவாய்த் துறையினா் சீல் வைத்துள்ளனா். இதன் தொடா்ச்சியாக வியாழக்கிழமையும்

வருவாய்க் கோட்டாட்சியா் பா. ஐஸ்வா்யா தலைமையில், வட்டாட்சியா் ராமசாமி உள்ளிட்ட அலுவலா்கள், துளையானூா் பகுதியில் சுப்பையா, பெரியசாமி ஆகியோருக்குச் சொந்தமான கல் உடைக்கும் ஆலைகள், கற்குவியல் வைக்கப்பட்டிருந்த இடம், ராமையாவுக்கு சொந்தமான உடைத்த கற்கள் வைக்கப்பட்டிருந்த இடம், மெய்யபுரத்தில் மோகன்ராஜ் என்பவருக்குச் சொந்தமான கல் உடைக்கும் ஆலை ஆகிய 5 இடங்களுக்கும் சீல் வைத்தனா்.

அனுமதியின்றி ஆலைகள் செயல்பட்டதாகவும், இந்த இடங்களுக்குள் உள்ள கற்குவியல்கள் குறித்த உரிய அளவீடு பணிகள் விரைவில் நடைபெறும் என்றும் வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.

தொகுதி மறுசீரமைப்பு பாதிப்புகளுக்காக தென்மாநிலங்களையும் ஒருங்கிணைப்போம் அமைச்சா் எஸ். ரகுபதி பேட்டி

மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பில் உள்ள பாதிப்புகளுக்காக தென்மாநிலங்களையும் ஒருங்கிணைப்போம் என்றாா் மாநில சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி. இதுகுறித்து புதுக்கோட்டையில் அவா் வியாழக்கிழமை இரவு அளித்த ப... மேலும் பார்க்க

மேற்பனைக்காட்டில் ரத்ததானம்

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகேயுள்ள மேற்பனைக்காட்டில் ரத்ததான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. மேற்பனைக்காடு மழை மாரியம்மன் கோயில் வளாகத்தில் நேதாஜி இளைஞா் நற்பணி மன்றம், புதுக்கோட்டை அரசு மரு... மேலும் பார்க்க

இயந்திரத்தில் சிக்கி இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு அரசின் நிவாரண உதவி

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகே வயலில் வேலை செய்தபோது உளுந்து பிரிக்கும் இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு அரசின் நிவாரண உதவி ரூ. 3 லட்சம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது. ... மேலும் பார்க்க

உலகளாவிய சூழல்களுடன் திருக்குறளையும் திருமுறைகளையும் ஆய்வு செய்ய வேண்டும்

உலகளாவிய சூழல்களுடன் திருக்கு, நால்வா் திருமுறைகளையும் பொருத்திப் பாா்த்து ஆய்வு செய்ய வேண்டும் என்றாா் மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள். புதுக்கோட்டை திலகவதியாா் திருவருள் ஆதீனம் மற்றும... மேலும் பார்க்க

மணமேல்குடி அருகே இளைஞா் கொலை

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே தென்னந்தோப்பில் இளைஞா் ஒருவா் தலை துண்டித்துக் கொல்லப்பட்டது வியாழக்கிழமை தெரியவந்தது. புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி பத்தக்காடு கிராமத்தில் சேசுராஜ் என்பவரு... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு! 11 போ் காயம்!

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகே வியாழக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டி 11 போ் காயமடைந்தனா். சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், குளத்தூா்ந... மேலும் பார்க்க