"வருண் சக்கரவர்த்தியை இந்தப் போட்டியில் பயன்படுத்தாதீங்க, ஏன்னா..!" - கம்பீருக்க...
``புதுச்சேரி அரசைப் பார்த்து திமுக அரசு கத்துக்கணும்" - த.வெ.க தலைவர் விஜய் தாக்கு
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கரூர் சம்பவத்துக்குப் பிறகு முதல்முறையாக பொதுவெளியில் புதுச்சேரியில் இன்று மக்களைச் சந்தித்தார்.
புதுச்சேரி அரசால் 5,000 பேருக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்பட்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய விஜய், ``ஒன்றிய அரசுக்குதான் தமிழ்நாடு ஒரு தனி மாநிலம், புதுச்சேரி ஒரு தனி யூனியன் பிரதேசம். ஆனா நமக்கு அப்படி கிடையாது. நாம எல்லோரும் ஒன்னுதான்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா-னு நம்ம வகையறா எங்க இருந்தாலும் அவங்க நம்ம உறவுதான்.

புதுச்சேரினாலே முதலில் மணக்குள விநாயகர், அரவிந்தர் ஆசிரமம், வில்லியனூர் மாதா ஞாபகத்துக்கு வரும். இது பாரதியார் இருந்த மண், பாரதிதாசன் பிறந்த மண்.
1977-ல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்தார். ஆனால் அதற்கு முன்னாடியே 1974-ல் இங்கே அவர்களின் ஆட்சி அமைந்தது.
நமக்காக வந்தவர் எம்.ஜி.ஆர், அவரைத் தமிழ்நாட்டில் மிஸ் பண்ணிடாதீங்க-னு அலெர்ட் பண்ணதே புதுச்சேரி மக்கள்தான்.
தமிழ்நாடு மாதிரியே புதுச்சேரி மக்களும் என்னை 30 வருடங்களாக தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த விஜய் தமிழ்நாட்டுக்கு மட்டும்தான் குரல் கொடுப்பான்னு நினைக்காதீங்க.
புதுச்சேரி மக்களுக்கும் சேர்த்ததான் குரல் கொடுப்பேன். அது எனது கடமை. புதுச்சேரி அரசு, தமிழ்நாட்டில் இருக்கிற தி.மு.க அரசு மாதிரி கிடையாது.
ஏனெனில் வேற ஒரு அரசியல் கட்சி நடத்துகிற நிகழ்ச்சியாகவே இருந்தாலும், அந்த நிகழ்ச்சிக்கு வருகின்ற மக்களுக்குப் பாதுகாப்பு கொடுத்து, பாரபட்சம் காட்டாமல் இந்த அரசு நடந்து கொண்டிருக்கிறது.

அப்படிப்பட்ட புதுச்சேரி அரசுக்கும், புதுச்சேரி சி.எம் சாருக்கும் மனப்பூர்வமாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதைப் பார்த்தாவது தமிழ்நாட்டில் இருக்கின்ற தி.மு.க அரசு கற்றுக் கொண்டால் நல்லா இருக்கும்.
ஆனா, அவங்க கற்றுக்கொள்ள மாட்டாங்க. வரப்போற தேர்தல்ல 100 சதவிகிதம் அவர்கள் கற்றுக் கொள்வார்கள். அதை மக்கள் பார்த்துக் கொள்வார்கள்" என்று கூறினார்.












