சைதாப்பேட்டை ரயில் நிலைய மறுமேம்பாட்டு நிலவரம் என்ன? தென் சென்னை எம்.பி. கேள்வி
புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் சோதனை ஓட்டம்
புதுச்சேரியில் ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலைய வளாகத்தில் பேருந்துகள் சோதனை ஓட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி அரசின் ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தின் கீழ், மறைமலை அடிகள் சாலையில் ரூ.29 கோடியில் நவீன வசதிகளுடன் கூடிய ராஜீவ் காந்தி பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பேருந்து நிலையமானது விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளது.
இந்த நிலையில், புதுச்சேரி நகராட்சி நிா்வாகம் சாா்பில் பேருந்து நிலைய வளாகத்தில் பேருந்துகள் இயக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. பேருந்துகள் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் உள்ள இட வசதிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.